தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா 25 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்துள்ளார்.
Also Read | தனது குருநாதர் அட்லிக்கு நன்றி சொன்ன DON பட இயக்குனர்.. இதான் காரணமா? சூப்பர் தகவல்
அறிமுகம்…
இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, தன்னுடைய 16 ஆவது வயதில் அரவிந்தன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அவருக்கு முதல் வெற்றிப்படமாக அமைந்தது அஜித் முருகதாஸ் கூட்டணியில் உருவான ’தீனா’ திரைப்படம். அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களோடு இணைந்து பணியாற்றியுள்ள யுவன் ஷங்கர் ராஜா இதுவரை 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
25 ஆண்டுகாலப் பயணம்…
1997 ஆம் ஆண்டு இசையமைப்பாளரான அறிமுகம் ஆன யுவன், இந்த 25 ஆண்டுகளில் அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதுபோல செல்வராகவன், வெங்கட்பிரபு, அமீர், ஏ ஆர் முருகதாஸ், ராம், ஹரி என முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் பணியாற்றியுள்ளார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ள யுவன், ரசிகர்களைக் கவர்ந்த நூற்றுக்கணக்கான பாடல்களைக் கொடுத்துள்ளார். யுவன் தனது இசையில் மெலடி, சோகப்பாடல்கள், குத்துப்பாடல்கள் என எல்லா வகையிலும் ஹிட்களைக் கொடுத்துள்ளார். குறிப்பாக இளையராஜாவைப் போலவே யுவனின் பின்னணி இசையமைப்புகளும் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்தவை.
ஹாரிஸ் ஜெயராஜ் வாழ்த்து…
இந்நிலையில் சினிமாவில் 25 ஆண்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள யுவனுக்கு சக இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். யுவனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “25 ஆண்டுகளை இசையமைப்பாளராக நிறைவு செய்துள்ள யுவன் ஷங்கர் ராஜாவுக்கு வாழ்த்துகள். இன்னும் பல ஆண்டுகள் வரவிருக்கின்றன” எனக் கூறியுள்ளார். ஹாரிஸின் அந்த பதிவில் யுவன் தனது நன்றியை பதிவு செய்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு யுவன் ஷங்கர் ராஜாவிடம் சில படங்களில் கிபோர்டு பிளேயராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8