"விஜய் சார் சொன்ன அந்த ஒரு விஷயம் என்ன TOUCH பண்ணிடுச்சு".. நெகிழ்ந்து போன YUVAN.. சுவாரஸ்ய பின்னணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா.

Advertising
>
Advertising

அவர் இசை அமைப்பாளராக அறிமுகமாகி, 25 ஆண்டுகள் கழிந்த நிலையில், காமெடி, லவ், இன்ஸ்பயரிங், சோகம் என அனைத்து ஏரியாவிலும் இசை மூலம் பூந்து விளையாடவும் செய்து வருகிறார்.

அது மட்டுமில்லாமல், அவரது பாடல்கள் பலவும் ரசிகர்களுக்கு பெரும் மருந்தாக இருந்து வருவதுடன் பலரது பிளேலிஸ்ட்டையும் ஆக்கிரமித்து வருகிறது.

தொடர்ந்து, ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கட்டிப் போட்டு வரும் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளான 31.08.2022 அன்று, அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுடன் ட்விட்டர் தளத்தில் கலந்துரையாடினார் யுவன்.

இதில், #AskU1 என்ற ஹேஷ்டேக்குடன் ஏராளமான கேள்விகளையும் ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதில் பலவற்றிற்கு வீடியோவை பதிவிட்டு பதில்களையும் தெரிவித்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. அந்த வகையில், நெட்டிசன் ஒருவர் நடிகர் விஜய்யுடன் எப்போது இணைவீர்கள் என்றும், சமீபத்தில் விஜய்யை சந்தித்து தொடர்பான அனுபவம் குறித்தும் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் இதற்கு யுவன் சொன்ன பதில், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

விஜய் குறித்த நெட்டிசன் கேள்விக்கு பதிலளித்த யுவன், "விரைவில் இந்த கூட்டணி அமையும் என நான் நம்புகிறேன். நாங்கள் சமீபத்தில் சந்தித்துக் கொண்ட போது, சிறப்பான உரையாடலை கொண்டிருந்தோம். விஜய் சார் ரொம்ப ஸ்வீட்ன்னு சொல்லலாம். நிறைய படங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் சந்தித்த சமயத்தில் மாநாடு ரிலீஸ் ஆகி இருந்தது என நான் நினைக்கிறேன். அப்போது, அதை பற்றி நிறைய கேட்டு தெரிந்து கொண்டார்.

 

அந்த சமயத்தில், விஜய் சார் சொல்லி மறக்க முடியாத விஷயம் எதுவென்றால் அவருடைய மகன் எனது வெறித்தனமான ரசிகர் என சொன்னது என் மனதை தொடும் வகையில் இருந்தது" என யுவன் கூறி உள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan shankar raja about chat with actor vijay

People looking for online information on Vijay, Yuvan Shankar Raja will find this news story useful.