"படத்துக்கு MUSIC பண்ணி முடிச்சதும் அஜித் சார் REACTION இது தான்".. சூப்பர் விஷயம் பகிர்ந்த யுவன்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா.

Yuvan shankar raja about ajith reaction after completing music
Advertising
>
Advertising

அவர் இசை அமைப்பாளராக அறிமுகமாகி, 25 ஆண்டுகள் கழிந்த நிலையில், காமெடி, லவ், இன்ஸ்பயரிங், சோகம் என அனைத்து ஏரியாவிலும் இசை மூலம் பூந்து விளையாடவும் செய்து வருகிறார்.

அது மட்டுமில்லாமல், அவரது பாடல்கள் பலவும் ரசிகர்களுக்கு பெரும் மருந்தாக இருந்து வருவதுடன் பலரது பிளேலிஸ்ட்டையும் ஆக்கிரமித்து வருகிறது.

தொடர்ந்து, ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கட்டிப் போட்டு வரும் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளை (31.08.2022) முன்னிட்டு, அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுடன் ட்விட்டர் தளத்தில் கலந்துரை ஆடி இருந்தார் யுவன் ஷங்கர் ராஜா.

இதில், #AskU1 என்ற ஹேஷ்டேக்குடன் ஏராளமான கேள்விகளையும் ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதில் பலவற்றிற்கு வீடியோவை பதிவிட்டு பதில்களையும் தெரிவித்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. விஜய்யுடனான சந்திப்பு பற்றியும், செல்வராகவன் கேட்ட நானே வருவேன் கேள்வி குறித்தும், சிம்பு திரைப்படத்தில் வரும் பாடல் என பல விஷயங்களுக்கு அசத்தலான பதில்களை யுவன் ஷங்கர் ராஜா கூறி இருந்தார்.

அந்த வகையில், நெட்டிசன் ஒருவர் நடிகர் அஜித் குமார் குறித்தும், அவருடன் அடுத்த திரைப்படம் குறித்தும் கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த யுவன் ஷங்கர் ராஜா, "இத்தனை ஆண்டுகள் அவருடன் பணிபுரிந்த போது நிறைய அற்புதமான தருணங்கள் அரங்கேறி உள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் இசையமைத்து முடித்த பின்னர், சிறப்பாக உள்ளது என பாராட்டுவார். மிகவும் அற்புதமான மனிதர். தனிப்பட்ட முறையில், நான் அஜித் சாருடன் பணியாற்றுவதை மிகவும் விரும்புவேன். விரைவில் அவரது படத்தில் பணியாற்றுவேன்" என யுவன் ஷங்கர் ராஜா கூறி உள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan shankar raja about ajith reaction after completing music

People looking for online information on Ajith Kumar, Yuvan Shankar Raja will find this news story useful.