"சிம்பு-க்கு COMPOSE பண்ணதுல என் ஃபேவரைட் SONG".. ரசிகர் கேள்விக்கு யுவனின் நச் பதில்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா.

Advertising
>
Advertising

அவர் இசை அமைப்பாளராக அறிமுகமாகி, 25 ஆண்டுகள் கழிந்த நிலையில், காமெடி, லவ், இன்ஸ்பயரிங், சோகம் என அனைத்து ஏரியாவிலும் இசை மூலம் பூந்து விளையாடவும் செய்துள்ளார். அது மட்டுமில்லாமல், அவரது பாடல்கள் பலவும் ரசிகர்களுக்கு பெரும் மருந்தாக இருந்து வருவதுடன் மட்டுமில்லாமல், பலரது பிளேலிஸ்ட்டையும் ஆக்கிரமித்து வருகிறது.

தொடர்ந்து, ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கட்டிப் போட்டு வரும் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளான இன்று (31.08.2022), அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுடன் ட்விட்டர் தளத்தில் கலந்துரையாடினார் யுவன்.

இதில், #AskU1 என்ற ஹேஷ்டேக்குடன் ஏராளமான கேள்விகளையும் ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதில் பலவற்றிற்கு வீடியோவை பதிவிட்டு பதில்களையும் தெரிவித்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. அந்த வகையில், சிம்புவுக்கு நீங்கள் இசை அமைத்த பாடல்களில் உங்களுடைய பேவரைட் எது என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த யுவன் ஷங்கர் ராஜா, சிம்புவுக்காக தான் இசை அமைத்த பாடல்களில் நிறைய ஃபேவரைட் பாடல்கள் இருக்கிறது, குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 'லூசுப் பெண்ணே' பாடல் தான் என்றும் பதில் கூறி இருந்தார். இது தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan opens up about his favourite composition for simbu

People looking for online information on Silambarasan TR, Yuvan Shankar Raja will find this news story useful.