"கணவர் ஓனர்.. மனைவி அட்மின்!" .. பப்ஜி மதனின் ஆபாச யூடியூப் சேனல் மீது பரபரப்பு நடவடிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஆபாச யூடியூப் பேச்சாளர் மதன் தற்போது போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது யூடியூப் சேனல் முடக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டினை விபிஎன் எனும் சர்வர் பயன்படுத்தி  இந்தியாவில் சட்டவிரோதமாக சிலர் விளையாடி வருகின்றனர். இரவு பகல் பாராமல் இந்த விளையாட்டை விளையாடும் பலருக்கும் அதன் நுணுக்கங்களை யூடியூப் வாயிலாக சொல்லிக்கொடுத்து வந்தவர் தான் மதன்.

இதனாலேயே பப்ஜி மதன் என அழைக்கப்பட இவர் பின்னர் தமது சேனலில் பெண்களை ஆபாசமாகவும் இழிவாகவும் திட்டுவது பேசுவது உள்ளிட்டவற்றை செய்ய, அதற்கு பதிலுக்கு பெண் குரலில் அவரது மனைவியும் பேச, மதனின் யூடியூப் சேனல் தீயாய் பற்றிக்கொண்டது. இந்த பேச்சுகளை விரும்பும் பலர் மதனின் சேனலை சப்ஸ்கிரைப் செய்தனர்.

எனினும் தொடர்ந்து பெண்களை தொடர்ந்து இழிவாக பேசிவந்த மதன் மீதும் அவரது யூடியூப் சேனல் மீதும் க்ரைம் பிரிவு போலீசாரிடமும், மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன. இவற்றின் அடிப்படையில் மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அப்போதுதான் மதனின் சேனலில் பேசிய பெண்குரல் கிருத்திகா தான் என்பதும், அந்த சேனலின் அட்மினும் கிருத்திகா தான் என்பதும் தெரியவந்தது.

மேலும் இந்த யூடியூப் சேனல் மூலமாக லட்சக்கணக்கில் சம்பாதித்தது, நலத்திட்டங்கள் செய்வதாகக் கூறி பலரிடம் பணம் பெற்றது, அந்த பணத்தில் சொகுசு கார்கள் வாங்கியது என அடுத்தடுத்த அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்தன. ஆனால் மதனோ இதற்காகவெல்லாம் தன்னை கைது செய்ய முடியாது என்றும் தன் வழக்கறிஞரை வைத்து பார்த்துக்கொள்வதாகவும் பேசிவந்துள்ளதாக தெரிகிறது.

பின்னர் மதனுக்கு முன்ஜாமின் கேட்டு வாதாடிய மதன் தரப்பு வழிக்கறிஞரிடம் வாதாடும் முன்பு மதன் பேசிய யூடியூப் பேச்சுகளை முழுமையாய் கேட்கச் சொல்லி நீதிபதி அறிவுறுத்தியதுடன் முன் ஜாமினை தள்ளுபடி செய்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மதனை தர்மபுரி மாவட்டத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கைது நடவடிக்கைக்கு பிறகு மதன் நடத்திவந்த ஆபாச யூடியூப் சேனல் தற்போது முடக்கப் பட்டுள்ளதாகவும், குறிப்பாக அவரது யூடியூப் பக்கத்தில் சுமார் 2 வருட வீடியோக்கள் நீக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ: “என்னைக்குமே நான் உங்க டார்லிங் தான்!”.. ரசிகர்களிடையே ப்ரியா ராமன் உருக்கம்!

Youtuber PUBG Madhan aka toxic Madhan YouTube channel blocked

People looking for online information on PUBG Madhan, Toxic Madhan, Youtuber Madhan will find this news story useful.