"உங்க TIME-ம் ஸ்டார்ட் ஆயிடுச்சு தம்பி!"... ‘சிம்புவை’ வாழ்த்தி ‘மாநாடு’ பிரபலம் வைரல் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் சமயத்தில் திரையரங்கில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்புவின் நடிப்பிலான மாநாடு படத்தை காண்பதற்கு நிச்சயமாக ரசிகர்களால் காத்திருக்க முடியவில்லை.

அதுவும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த கூட்டணி காம்போவில் உருவாகும் படத்துக்கும் பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிளின் முழுமையான பாடல் ஜூன் 21 மாலை 7.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “சிலம்பரசன் டி.ஆர்.நடிப்பிலும், மாஸ் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்திலும், நமது வி ஹவுஸ் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் "மாநாடு" படத்தின் முதல் பாடலை இன்று வெளியிடுகிறோம்.

உலக இசைத் தினமான இன்று அப்பாடலை வெளியிடுவதில் மகிழ்கிறோம். கேட்டு,  பார்த்து மகிழுங்கள்.” என தமது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ: "இன்னொரு குடும்ப பாட்டு!".. சிம்புவின் மாநாடு ... எதிர்பார்ப்பை கூட்டும் முதல் சிங்கிள் டீசர்!

தொடர்புடைய இணைப்புகள்

Your time started maanaadu producer wishes silambarasan

People looking for online information on Maanaadu, Silambarasan TR, Venkat Prabhu will find this news story useful.