திரைப்படங்கள் குறித்த தகவல்களையும் திரைப் பிரபலங்களின் தொடர்ச்சியான அப்டேட்களையும் கொண்டு சென்று சேர்ப்பவர்கள் திரைப்பட பத்திரிக்கையாளர்கள்.

முந்தைய காலங்களில் அச்சு ஊடக பத்திரிகைகள் வாயிலாக பெருவாரியான மக்கள் திரை செய்திகளை தெரிந்து கொண்டனர். தற்போது செய்திகளை டிஜிட்டல் வழியாக கொண்டு சென்று சேர்க்கும் பணியை ஊடகங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
அப்படி சினிமா துறையில் இருக்கும் பிரபல பத்திரிகையாளர்களுள் ஒருவர் தான் இளம் பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் கௌஷிக் LM. திரைப்பட ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலரும் பின்தொடரும் பல்வேறு திரைப்பட பத்திரிகையாளர்களுள் கௌஷிக் ஒருவர்.
இந்நிலையில்தான் தற்போது கௌஷிக் மரணம் அடைந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இளம் வயதிலேயே மாரடைப்பால் மரணம் அடைந்த கௌஷிக்கின் மரணத்திற்கு, மேலும் பல திரைப் பிரபலங்கள் மற்றும் சக பத்திரிகையாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த கௌஷிக், Behindwoods வெப்சைட் செய்தி தளத்தில், செய்தி ஆசிரியராக பணியாற்றிய முன்னாள் ஊழியர். அவருடைய உழைப்பு மற்றும் பங்களிப்பு பெரியது. அவருடைய மறைவு எனும் இந்த மீளாத் துயரத்துக்கு எங்கள் குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.