BIGG BOSS TAMIL 6 : “நீங்க ஒன்னும் பிக்பாஸ் இல்ல.!” .. கிச்சனில் சீறிக்கொண்ட அசீம் - மகேஸ்வரி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கிச்சன் டீம், பாத்திரம் கழுவும் டீம், க்ளீனிங் டீம் என தனி தனியாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒரு அணியினருக்கு என்ன வேண்டும் என்றாலும், மற்ற அணியினர் கேட்பவற்றை செய்துகொடுத்துவிட்டு தங்களுடைய தேவைகளை பெற முடியும். அப்படித்தான் கிச்சனில் நிற்கும் VJ மகேஸ்வரிக்கும் அங்கு வந்த அசிமுக்கும் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்படி லக்சூரி பட்ஜெட் டாஸ்கின் போது கிச்சனுக்கு வந்து மகேஸ்வரியிடம் தனக்கு பால் டீ வேண்டும் என்று கேட்டு நடிகர் அசீம் சண்டையிடுகிறார்.

அப்போது குக்கிங் டீம், சமைத்து முடித்துவிட்டு மற்றவர்களை உபசரித்து அவரவருக்கு என்ன வேண்டும் என கேட்டு செய்ய வேண்டும். ஒருவழியாக மாலையில், VJ மகேஸ்வரியிடம் அசீம் பால் டீ கேட்கிறார். அதற்கு பதில் அளித்த மகேஸ்வரி,  ‘முதல் நாள் வேறு.. இப்போது டாஸ்க் நடக்கிறது.. இந்த சமயத்தில் எதையும் யாருக்கும் கூடுதலாக செய்ய முடியாது.. எல்லாருக்கும் டீ போடும்போது உங்களுக்கு போடுகிறேன்’ என்று வாதிடுகிறார். அதற்கு சற்றே கோபப்பட்ட அசீம், தானே டீ போட்டுக்கொள்வதாக சொல்ல, ஆனால், மகேஸ்வரியோ, “அதெப்படி குக்கிங் டீம் இருக்கும்போது நீங்கள் டீ போட்டு குடிக்க முடியும்? அத்துடன் மத்தவங்களுக்கு ஷார்ட்டேஜ் ஆகிவிட கூடாது” என கேட்கிறார்.

இதனால் கோபப்பட்ட அசீம்,  ‘எதுக்கு சின்ன விசயத்துக்கு இவ்வளவு பேச வேண்டும்.. என்ன கேட்டுவ்விட்டேன்... நீங்கள் ஒன்றும் பிக்பாஸ் இல்லை.. நீங்க என்ன பிக்பாஸா?’ என்று கத்துகிறார். பின்னர் மீண்டும் மகேஸ்வரி அவருக்கு புரியவைக்க முயற்சிக்கிறார். அப்போது அங்கு வந்த ஷிவின் கண்ணாடி அணிந்தபடி அசீம்க்கு அட்வைஸ் பண்ண, அவரை கண்ணாடியை கழட்ட சொல்லிவிட்டு செல்கிறார் அசீம்.

ஆனால் அதன் பின்னர் இருவரும் சமாதானமாக பேசிக் கொள்கின்றனர். அவர்கள் சமாதானமாக பேசிக் கொள்ளும் காட்சியும் பிக் பாஸில் இடம் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து பிக் பாஸின் அடுத்த கட்ட டாஸ்க்காக அனைவரும் ஒரு மைக் முன்பு என்று அதிக டெசிபிளில் கத்த வேண்டும். யாருடைய குரலில் இருந்து வரும் ஒலி அளவு அதிக டெசிபிளை தொடுகிறதோ அவர்களுக்கு ஸ்டார் வழங்கப்படும். இதை தொடர்ந்து அனைவரும் ஒருவராக கத்தக்கூடிய நிகழ்வுகள் நடக்கின்றன. அதிலும் வாக்குவாதம் முளைத்து பிக் பாஸ் வீடு சூடு பிடிப்பதை காண முடிகிறது.!

Also Read | வலிய சென்று கேட்ட மகேஸ்வரி.. சாப்பாடு ஊட்டிவிட சொல்லி அமுதவாணன் அட்ராசிட்டி.! கடைசியா ஒரு ட்விஸ்ட்.

தொடர்புடைய இணைப்புகள்

You are not bigg boss azeem VJ Maheswari drift bigg boss 6 tamil

People looking for online information on Amuthavanan, Azeem, பிக்பாஸ், Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Housemates, Vj maheswari will find this news story useful.