சின்னத்திரையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்களில் யோகி பாபுவும் ஒருவர்.
Also Read | தில் ராஜூ வெளியிடும் சமந்தாவின் PAN INDIA படம்.. ரிலீஸ் எப்போ?
தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் அவர் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கூர்கா, தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்கள் கவனத்தைப் பெற்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் யோகி பாபு அடுத்த கட்ட வளர்ச்சியை சினிமாவில் எட்டினார்.
ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் யோகி பாபு நடித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு குல தெய்வம் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு விசாகன் என பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன் யோகி பாபு & மஞ்சு பார்கவி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்கு முன் தனது மகன் விசாகனின் இரண்டாவது பிறந்தநாள் மற்றும் மகளுக்கு பெயர் சூட்டு விழாவை தனது வீட்டில் யோகி பாபு நடத்தினார். இந்த விழாவில் நடிகர் பார்த்திபன் & அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு புத்தாண்டை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது VIP தரிசனம் செய்ய யோகி பாபு ஒருமணிநேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கோயில் நிர்வாகத்திடம் கூறியும் யோகி பாபு விஐபி கேட் வழியாக அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அனுமதிக்கபடாததால் காவல் துறையினர் உதவியுடன் யோகி பாபு மக்களோடு மக்களாக சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் அங்கு கூடியிருந்த மக்களிடம் செல்ஃபி எடுத்து கலந்துரையாடல் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
தற்போது யோகி பாபு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர், விஜய் நடிக்கும் வாரிசு, ஷாருக்கான் நடிக்கும் ஜவான் ஆகிய படங்களில் பணிபுரிந்து வருகிறார்.
Also Read | "வாரிசு பட விழாவில் விஜய் ஹேர் ஸ்டைல் & உடை இன்னும் கொஞ்சம்".. ஜேம்ஸ் வசந்தன் கருத்து!