மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநரான ரெஜிஷ் மிதிலா, "யானை முகத்தான்" எனும் படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார். ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி வருகிறது.
Also Read | Ravindar Mahalakshmi Wedding: பிரபல சீரியல் நடிகையை திருமணம் செய்துகொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர்.! Trending
இப்படத்தில், கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். அதே கணேஷ் கதாபாத்திரத்தில் ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் நடிக்கிறார். படத்தில் யோகிபாபு மற்றும் ரமேஷ் திலக் ஆகியோருடன் ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா (‘மருது’ பாட்டி), நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி, ராஜஸ்தான் பகுதிகளில் நடந்தது. தி கிரேட் இந்தியன் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு கார்த்திக் S நாயர் ஒளிப்பதிவு செய்ய, சைலோ படத்தொகுப்பை மேற்கொள்கிறார். பரத் சங்கர் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
விநாயகர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட தீவிர பக்தர் ரமேஷ் தில். ஏறக்குறைய தான் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் கடன் வாங்கி விடுவார். பிறகு, வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல் திணறுவார். இவரிடம், யோகி பாபு தன்னை விநாயகர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அத்துடன் ரமேஷ் திலக்கிடம் ஒரு நிபந்தனையை முன்வைக்கிறார்.
இப்படி லூட்டி அடிக்கும் இவர்களை சுற்றி நடக்கும் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. இதை சுவாரசியமாக இயக்கியுள்ளார் டைரக்டர். இவர்களது அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளராக மல்லியக்கா கேரக்டரில் ஊர்வசியும், சிறிய பான் மசாலா கடை நடத்தும் மைக்கேலாக கருணாகரனும் நடிக்கிறார்கள்.
Also Read | விக்ரமன் மகனை பாத்துருக்கீங்களா? Hitlist படத்தில் ஹீரோவாகிறார்.! தயாரிக்கும் KS ரவிகுமார்.