‘எமலோக செட் முதல் எமராஜாவின் சேட்டை வரை..’ - யோகிபாபுவின் தர்மபிரபு மேக்கிங் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்மபிரபு’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

முத்துகுமரன் இயக்கத்தில் யோகிபாபு எமனாக நடித்துள்ள இப்படத்தில் கருணாகரன்,ஜனனி ஐயர்,‘வத்திக்குச்சி' திலீபன், மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், சாம், மேக்னா நாயுடு, ரேகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

எமலோகத்தில் எமன் பதவி தேர்தல் நடப்பதையும், அதற்காக போட்டியிடும் எமன் வாரிசான யோகிபாபுவும், சித்ரகுப்தனாக இருக்கும் கருணாகரனும் போட்டியிடுவதும், அதில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு ஃபேண்ட்சி படமாக உருவாகியுள்ளது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். புதுவிதமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருக்கும் இப்படம் இன்று (ஜூன்.28) ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

‘எமலோக செட் முதல் எமராஜாவின் சேட்டை வரை..’ - யோகிபாபுவின் தர்மபிரபு மேக்கிங் வீடியோ வீடியோ

Yogi Babu starring Dharmaprabhu Making video has been released

People looking for online information on Dharmaprabhu, Dharmaprabhu Making, Yogi Babu will find this news story useful.