யோகிபாபு - ஓவியா நடிக்கும் “காண்ட்ராக்டர் நேசமணி” படத்தில் இணையும் யூடியூப் பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி மற்றும் பலர் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு ஃபிரண்ட்ஸ் திரைப்படம் வெளியானது. இயக்குனர் சித்திக் இயக்கிய இந்த திரைப்படம் காமெடியாகவும் கலகலப்பாகவும் இருந்ததுடன், நட்பின் ஆழத்தையும் பேசிய திரைப்படம்.

இன்று திரையுலகில் மாஸ் நடிகர்களாக இருக்கும் விஜய் & சூர்யா இணைந்து நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் வடிவேலு காண்ட்ராக்டர் நேசமணி எனும் வேறலெவல் கேரக்டரில் நடித்திருப்பார்.

வயிறு குலுங்க பார்வையாளர்களை இன்றும்  சிரிக்க வைக்கும் இந்த காண்ட்ராக்டர் நேசமணி என்கிற கதாபாத்திரத்தை நினைவுபடுத்தி, "நேசமணிக்காக பிரார்த்தியுங்கள் - #PrayForNesamani" என்கிற Hashtag சில வருடம் முன்பு இணையதளத்தில் ட்ரெண்டாகி வந்தது.

இந்த ‘காண்ட்ராக்டர் நேசமணி’ எனும் தலைப்பில்தான் தற்போது ஓவியா மற்றும் நடிகர் யோகி பாபு புதிய திரைப்படத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக்கை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் முன்னதாக வெளியிட்டு இருந்தார்.

ஸ்வதீஷ் எம்.எஸ். இயக்கும் இந்த படத்துக்கு, சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்கிறார். தர்ம பிரகாஷ் இசையமைக்கிறார். ஆன்கா மீடியா இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் விடியல் ராஜு மற்றும் எஸ்.எஸ்.பிரபு இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக்கை பகிர்ந்து இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் யூடியூப் பிரபலமான ஜிபி முத்து இணைந்துள்ளார். ஏற்கனவே சன்னி லியோன் நடிக்கும் படத்தில், ஜிபி முத்து இணைந்த நிலையில், பிக்பாஸ் 5வது சீசனில் ஜிபி முத்து பங்கேற்பாரா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்து வந்தது.

ஆனால் அவரோ, தம் மனைவி, குழந்தைகள் மற்றும் செல்போனை பிரிந்து இருக்க முடியாது என்பதால் பிக்பாஸில் கலந்துகொள்வது என்பது முடியாத ஒன்று என விளக்கம் அளித்து வீடியோ பதிவிட்டிருந்தார்.

இதனிடையே இந்த படத்தின் பூஜையில் ஓவியா, யோகிபாபு, ஜிபி முத்து, தங்கதுரை உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். நடிகர் சிபிராஜ், தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குநர் விருமாண்டி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட இந்த படத்தின் பூஜை வீடியோ இணைப்பில் உள்ளது.

யோகிபாபு - ஓவியா நடிக்கும் “காண்ட்ராக்டர் நேசமணி” படத்தில் இணையும் யூடியூப் பிரபலம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Yogi Babu Oviya GP Muthu Contractor Nesamani poojai video

People looking for online information on Contractor Nesamani, ContractorNesamani, GP MUTHU, Oviya, Vadivelu, Yogi Babu will find this news story useful.