விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

”என்ன ஆனாலும் சரி…” வியர்வை வழிய ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் viral pic!
கோலமாவு கோகிலா to பீஸ்ட்….
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தற்போது விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதனால் அவரின் முந்தைய படங்களில் இடம்பெற்ற யோகிபாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே உள்ளிட்ட பல நகைச்சுவைக் கலைஞர்கள் இந்த படத்திலும் உள்ளனர். இவர்களோடு பூஜா ஹெக்டே, செல்வராகவன், மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் ஏப்ரல் 13 ஆம் தேதி பேன் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் வெளியாகிறது.
டிரைலர்க்காக waiting…
பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன. அதுபோல இதுவரை வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. அரபிக்குத்து பாடல் யுடியூபில் 200 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனைப் படைத்துள்ளது. இதையடுத்து நாளை இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்ற அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டதில் இருந்து ரசிகர்கள் வெயிட்டிங் மோடில் உள்ளனர். இதையொட்டி சன் பிக்சர்ஸ் நேற்று படக்குழுவினர் அனைவரோடும் விஜய் ஒளிந்து நின்று எதையோ பார்ப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது. அதோடு ‘உங்கள மாதிரியே நாங்களும் பீஸ்ட் டிரைலருக்காக காத்திருக்கோம் நண்பா’ எனக் கூறியுள்ளார். இதுவரை பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் சீரியஸ் மோடில் இருந்த நிலையில் நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.
பீஸ்ட் புகைப்படத்தில் யோகிபாபு,…
இயக்குனர் நெல்சன் இயக்கிய டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா ஆகிய இரண்டு படங்களிலுமே யோகி பாபுவுக்கு முக்கியமான வேடத்தை கொடுத்திருந்தார். அந்த கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதையடுத்து பீஸ்ட் படத்திலும் யோகி பாபு நடிக்கிறார். ஆனால் இதுவரை வெளியான எந்த ஒரு புகைப்படத்திலும் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் யோகி பாபு இடம்பெற்றுள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினரோடு யோகிபாபு அமர்ந்திருக்கும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மன்மத லீலை ரிலீஸ் தாமதம்: "கடவுள் இருக்கார்".. வெங்கட் பிரபு பாணியில் தயாரிப்பாளர் ட்வீட்