ஸ்வீட் எடுங்க.. தீபாவளி நாளில் பெண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் யோகி பாபு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்களில் யோகி பாபுவும் ஒருவர்.

Advertising
>
Advertising

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் அவர் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கூர்கா, தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்கள் கவனத்தைப் பெற்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் யோகி பாபு அடுத்த கட்ட வளர்ச்சியை சினிமாவில் எட்டினார்.

ரஜினிகாந்த்,  அஜித்குமார், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் யோகி பாபு நடித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு குல தெய்வம் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு விசாகன் என பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று யோகி பாபு & மஞ்சு பார்கவி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது யோகி பாபு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர், விஜய் நடிக்கும் வாரிசு, ஷாருக்கான் நடிக்கும் ஜவான் ஆகிய படங்களில் பணிபுரிந்து வருகிறார்.

ஸ்வீட் எடுங்க.. தீபாவளி நாளில் பெண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் யோகி பாபு! வீடியோ

Tags : Yogi Babu

தொடர்புடைய இணைப்புகள்

Yogi Babu and Wife Manju Bhargavi Blessed with baby girl

People looking for online information on Yogi Babu will find this news story useful.