தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார் நடிகர் யோகிபாபு. ரஜினி, அஜித், விஜய் போன்ற டாப் ஹீரோக்கள் பலருடனும் நடித்து விட்டார். அவர் இப்போதும் கைவசம் பல படங்களுடன் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் கடந்த பிப்ரவரி மாதம் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்பவரை குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் சினிமா, அரசியல் பிரபலங்களை அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருந்தபோது, கொரோனா ஊரடங்கு ஆரம்பித்ததை அடுத்து அந்த நிகழ்ச்சியை நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது யோகி பாபு மற்றும் மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு தற்போது அழகிய அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.