''BABY COMING SOON'' - மகிழ்ச்சியில் மைனா நந்தினியுடன் ஸ்பெஷல் ஃபோட்டோவை பகிர்ந்த யோகேஷ்வரன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்திருந்த நந்தினி அந்த தொடருக்கு பிறகு அவர் மைனா நந்தினி என்றே அழைக்கப்படுகிறார். அந்த அளவுக்கு அந்த வேடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஏராளமான தொடர்களில் நடித்துள்ளவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

'வம்சம்', 'ரோமியோ ஜூலியட்', 'காஞ்சனா 3' உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் நடித்திருந்தார். கடந்த வருடம் இவருக்கும் சன் டிவியில் 'நாயகி' தொடரில் நடிக்கும் யோகேஷ்வரனுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தனக்கு வளைகாப்பு நடைபெற்றதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோவுடன் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் யோகேஷ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைனா நந்தினியுடன் இருக்கும் ஸ்பெஷல் ஃபோட்டோவை பகிர்ந்து, Baby Coming Soon என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Yogeshwaran shares special pic with his pregnant wife Myna Nandhini | கர்ப்பமாக இருக்கும் மைனா நந்தினியுடன் ஸ்பெஷல் ஃபோட்டோவை பகிர்ந்த ய�

People looking for online information on Myna Nandhini, Yogeshwaran will find this news story useful.