எவதிவே...! - RX 100 நாயகனின் ஹிப்பி பாடல் லிரிக் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘RX 100’ திரைப்படத்தின் நாயகன் கார்த்திகேயா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹிப்பி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘எவதிவே’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

சூர்யா-ஜோதிகாவின் ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹிப்பி’ திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இப்படத்தில் கார்த்திகேயாவுக்கு ஜோடியாக பாலிவுட் டிவி பிரபலம் டிகன்கானா சூர்யவன்ஷி நடித்துள்ளார். மேலும், ஜஸ்பா சிங், வெண்ணிலா கிஷோர், ஜேடி சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரவீன் கே.எல் எடிட்டிங் செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையில், பின்னணி பாடகர் கார்த்திக் பாடியுள்ள இப்பாடலை அனந்த ஸ்ரீராம் எழுதியுள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி நெட்டிசன்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது ‘எவதிவே’ பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. கோடை விடுமுறையைடொட்டி விரைவில் இப்படம் ரிலீசாகவுள்ளது.

எவதிவே...! - RX 100 நாயகனின் ஹிப்பி பாடல் லிரிக் வீடியோ வீடியோ

Yevathive song lyric video from RX 100 star Karthikeya Gummakonda's 'Hippi' film has been released

People looking for online information on Hippi, Kalaipuli S Thanu, Karthikeya, RX100, T N Krishna will find this news story useful.