சிவகார்த்திகேயனை ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தவர் பாண்டிராஜ். அதைத் தொடர்ந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனை இயக்கினார். தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
கிராமிய பின்னணியில், அண்ணன் - தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனு இம்மானுவேல், அர்ச்சனா, ரமா, ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு, வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது படு பயங்கரமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'எங்க அண்ண' பாடலின், முழு வீடியோ பாடல் இன்று இரவு 8 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.