சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் தென்மேற்கு பருவக்காற்று.
பல விருதுகளை குவித்த இந்த திரைப்படத்தை தொடர்ந்து நீண்ட நாட்கள் கழித்து விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கிய திரைப்படம் தர்மதுரை. விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படம் பெருமளவில் ஹிட் அடித்தது.
இந்நிலையில் மீண்டும் சீனுராமசாமி விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகிவரும் மாமனிதன் திரைப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. காரணம் இந்த திரைப்படத்தின் காம்போ தான். ஆம், விஜய் சேதுபதி - சீனு ராமசாமி இணைந்த இந்த கூட்டணிக்கு இந்த முறை இளையராஜா - யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைந்து இசை அமைக்கிறது.
இந்நிலையில் தற்போது இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்து இருக்கும் ‘யே.. ராசா’ என்கிற பாடல் வெளியாகி இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் u1records லேபிளில் வெளியாகியிருக்கும் இந்தப் பாடல், மனதை வருடும் மெல்லிய தன்னம்பிக்கை பாடலாக இந்த சூழலில் பலரையும் கவர்ந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகிய நிலையில் இப்போது இந்த பாடல் இரண்டாவது சிங்கிளாக வெளியாகியுள்ளது.
இயற்கை சார்ந்த ஒரு சூழலில் நடந்துகொண்டே செல்வது போல் பாடிக்கொண்டே யுவன்சங்கர்ரஜா செல்லும் இந்த பாடலுக்கு தமது தன்னம்பிக்கை வரிகளால் உயிர் கொடுத்திருக்கிறார் பாடலாசிரியர் பா.விஜய். விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: "ஒரிஜினல் ஐடில வாங்க.. abusive லாங்வேஜ் வேணாம்ங்க!" - ட்விட்டரில் கர்ணன் வில்லன் காட்டம்!