தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரின் மூத்த மகன் யாத்ரா தனுஷ் அண்மை காலமாகவே ட்ரெண்ட் ஆகி வருகிறார்.
Also Read | Cobra Trailer: அடடே.. விக்ரம் நடிக்கும் கோப்ரா.. டிரெய்லர்ல மதுரை முத்துவ கவனிச்சீங்களா..?
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவருடனும் அவ்வப்போது தனுஷூம், அவ்வப்போது ஐஸ்வர்யாவும் நேரம் ஒதுக்கி வருகின்றனர். மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனுஷ் பகிர்ந்து வருவார். இதேபோல் ஐஸ்வர்யா தனுஷூம் மகன்களுடன் இருக்கும் அந்த வேளையே போதுமானது என்று பதிவுகளுடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இவர்களுள் யாத்ரா அண்மையில், தான் படிக்கும் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவியேற்றது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வந்தன. இந்த புகைப்படங்களில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே இடம் பெற்றுள்ளனர். பள்ளியின் மற்ற மாணவர்கள் முன்னிலையில் ஸ்போர்ட்ஸ் கேப்டன் லேபிளுடன் யாத்ரா திகழ்ந்த இந்த ஃபோட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
இதே வேளையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து யாத்ரா தனுஷ் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றும் வைரலாகி வருகிறது. ஆம், யாத்ரா படிக்கும் பள்ளியில் இருந்து பள்ளி மாணவர்களை கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இருந்துள்ளார். அவரும் யாத்ரா படிக்கும் பள்ளி மாணவர்களை குழுமமாக சந்தித்து, அவர்களுடன் அன்பாக பேசி சாக்லேட் கொடுத்து உரையாடியுள்ளார். அப்போது தனுஷ் - ஐஸ்வர்யாவின் மகனும், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கஸ்தூரி ராஜா ஆகியோரின் பேரனுமான யாத்ராவிடமும் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து அப்போது செய்தி சேனலில் பேசிய யாத்ரா, “ஜெயலலிதா அம்மா எங்களை கூப்பிட்டாங்க. ஒவ்வொருவராக சாக்லேட் கொடுத்து எங்களிடம் பேசினாங்க.. எங்களுக்கு அட்வைஸ் பண்ணாங்க. அது எனக்கு வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு மகிழ்ச்சி” என்று நல்ல தமிழில் அந்த சிறுவயதில் தெளிவுடன் பேசியுள்ளார். இந்த பேட்டி வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
Also Read | BB Jodigal 2: "பாவனி இப்போ லேடி அமீரா..?".. பிரம்மிக்க வைத்த புதிய ஃப்ரோமோ..