பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிக முக்கியமான போட்டியாளராக மாறியிருக்கிறார் பாலாஜி. ஆரம்பத்தில் அமைதியாக இருந்து, பின்பு இருந்து 'Simply waste' என்ற பட்டத்தை பெற்றவுடன் அவருக்கு போட்டியின் மீதான ஆர்வம் அதிகமாகியது. அதன் பிறகு பல அதிரடிகளை செய்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.
இந்நிலையில் 2017ம் ஆண்டு பாலாஜி விஜய் டிவியில் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். 'கனெக்ஷன்' என்ற பிரபலமான அந்த நிகழ்ச்சியில் அவர், பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் பங்கேற்ற வீடியோ சமீபத்தில் வைரலானது.
இந்நிலையில் நடிகை யாஷிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர் "பிக்பாஸ் பாலாஜி உங்களது நண்பரா? ஆனால் நீங்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் கூட Follow செய்யவில்லையே" என்பது போல கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகை யாஷிகா "நாங்க நல்ல நண்பர்களாக இருந்தோம். ஆனால் இன்று அவரை நினைத்து என்று நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் எனக்கு தெரியும் இந்த நாளுக்காக அவர் எவ்வளவு ஆவலுடன் காத்திருந்தார்" என்று கூறியுள்ளார்.