இன்ஸ்டாகிராமில் வரம்பு மீறி கேள்வி கேட்ட ரசிகர்கள்.. நடிகை யாசிகா ஆனந்த் அளித்த VIRAL பதிலடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த்.

Advertising
>
Advertising

Also Read | ஜிகர்தண்டா டபுள் X பட ஷூட்டிங்.. நடிகர் லாரன்ஸ் பற்றி SJ சூர்யா வைரல் பதிவு! தெறி அப்டேட்ஸ்

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் பயிற்சியாளர் வேடத்தில் நடித்து யாஷிகா ஆனந்த் அறிமுகமானார். துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த யாஷிகா ஆனந்த், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.

இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3.9 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். அவ்வப்போது யாஷிகா ஆனந்த் பகிரும் சுற்றுலா & போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். மேலும் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்விலும் அவ்வப்போது யாஷிகா ஆனந்த் கலந்து கொள்வார்.

தற்போது "சைத்ரா" என்ற படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்,  மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார். பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் M. ஜெனித்குமார். இவர் பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

இந்நிலையில் நேற்று யாஷிகா ஆனந்த், ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது சிலர் வரம்பு மீறி சில கேள்விகளை கேட்டனர்.

யாஷிகா ஆனந்திடம், "உடல் அளவுகள்" குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "என்னுடைய உடைகளை தைத்து தர போகிறீர்களா?" என யாஷிகா பதில் அளித்தார்.

"உங்களை ஆடை இல்லாமல் பார்த்த நபர் யார்?" என வரம்பற்ற கேள்விக்கு "மருத்துவர்கள்" என யாஷிகா ஆனந்த் பதில் அளித்துள்ளார்.

Also Read | அப்படியே அச்சு அசலா இருக்கு.. வெப் சீரிஸில் விஜய் சேதுபதிக்கு தமிழ் டப்பிங் பேசிய TSK..!

இன்ஸ்டாகிராமில் வரம்பு மீறி கேள்வி கேட்ட ரசிகர்கள்.. நடிகை யாசிகா ஆனந்த் அளித்த VIRAL பதிலடி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Yashika Anand question answer session with fans

People looking for online information on Yashika Aannand will find this news story useful.