2 டிகிரி குளிர்ல இப்படி ஒரு டிரெஸ்ஸா..? நெட்டிசன்களின் கமெண்டுக்கு யாஷிகா பதிலடி! YASHIKA ANANAD

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.

Advertising
>
Advertising

Also Read | “இவன மாதிரி ஆளுகளோட இந்த வீட்ல இருக்க வெறுப்பா இருக்கு”.. ஏடிகே பரபரப்பு பேச்சு..! Bigg Boss 6 Tamil

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நடிகை யாஷிகா ஆனந்த் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். முன்னதாக சில திரைப்படங்களிலும் நடித்து இருந்த யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேவந்த பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

கடந்த வருடங்களில் நண்பர்களுடன் காரில் சென்றபோது விபத்துகுள்ளாகி மீண்ட யாஷிகா ஆனந்த், சில நாட்கள் கழித்து சீரான உடல்நிலையுடன் இயங்கத் தொடங்கினார். தற்போது மிகவும் பாசிடிவாக தமது அடுத்தடுத்த திரைப்பயணங்களில் ஈடுபட்டு வரும் யாஷிகா ஆனந்த், சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

முன்னதாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான கடமையை செய் படத்தில் நடித்திருந்த யாஷிகா ஆனந்த், தற்போது வெளிநாடுகளில் இருந்தபடி சோசியல் மீடியாவில் புகைப்படங்களையும் போஸ்டுகளையும் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த், தற்போது லண்டனில் இருக்கிறார். அங்கு குளிர் அதிகம் உள்ள நிலையில், அங்குள்ள வீதியில் எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ள யாஷிகா, 2 டிகிரி குளிரிலும் தான் ஹாட்டாக இருப்பதாக குறிப்பிட்டு போஸ்ட் பண்ணியுள்ளார். இதை பார்த்த இன்ஸ்டாவாசி ஒருவர், “உங்கள் ட்ரெஸ்ஸை பார்த்து எப்படி சிரிக்கிறார்கள் பாருங்கள்” என கூற, “அவங்க என்னை மாதிரி ட்ரெஸ் போட முடியாததால் அப்படி சிரிக்குறாங்க. என்னை மாதிரி இப்படி டிரெஸ் பண்ணிகிட்டு நடப்பது எளிதல்ல என்று கருதுவதால் அவர்கள் சிரிக்கிறார்கள். உங்களுக்கு பொறாமை” என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் இன்னொரு இன்ஸ்டா வாசி, “2 டிகிரி குளிர்ல நீங்க எப்படி இப்படி இருக்கீங்க..  ஒரு ஸ்வட்டர் அல்லது ஜாக்கெட்டாச்சும் மேல போட்டக்கணும் நீங்க” என்று கூற, அதற்கு யாஷிகா “இப்போது நான் என்ன ட்ரெஸ் போட வேண்டும் என்றெல்லாம் அனைவரும் சொல்கிறார்கள். இவர்கள் பேச்சை கெட்டால் அது எனது கடைசி நாளாகிவிடும்” என்று பதில் கொடுத்துள்ளார்.

Also Read | RJ விக்னேஷ்காந்த் மற்றும் பலர் நடிப்பில் ராஜ்மோகன் இயக்கும் பாபா பிளாக் ஷீப்..!

தொடர்புடைய செய்திகள்

Yashika ananad in 2 degree london viral reply in insta

People looking for online information on Yashika ananad, Yashikaa Annand will find this news story useful.