VIDEO: KGF CHAPTER 2 படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட END கார்டு பாடல்.. எப்படி இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியாகி இருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | JUNIOR ARTIST-அ 250ரூ சம்பளம்..இப்போ கோடில சம்பளம்.. அதுக்கு காரணம் இதான்! விஜய் சேதுபதி EXCLUSIVE பேட்டி!

இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த 10,000 திரையரங்குகளில் கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் அடங்கும்.

தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசாகி உள்ளது. இந்த படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 134.5 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது. முதல் இரண்டு நாளில் இந்த படம் 240 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் முதல் 4 நாளில் 546 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்துள்ளது.

இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் மிகப்பெரிய் ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இந்த படம் முடிந்த பின் வரும் இறுதி டைட்டில் கார்டு மற்றும் கடைசி காட்சிகளுக்கு மான்ஸ்டர் பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த மான்ஸ்டர் பாடல் முதலில் ரிலீஸ் செய்யப்படாமல் சஸ்பென்சாக வைக்கப்பட்டிருந்தது, இச்சூழலில் இந்த மான்ஸ்டர் பாடலை படக்குழு வீடியோ வடிவில் பிரத்யேகமாக நடனம் அமைத்து முழு பாடல் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்த பாடல் 5 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

VIDEO: KGF CHAPTER 2 படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட END கார்டு பாடல்.. எப்படி இருக்கு? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Yash Starring KGF CHAPTER 2 Monster Song Released

People looking for online information on KGF Chapter 2 Movie, KGF2, Monster Song Release, Prashanth Neel, Yash will find this news story useful.