"பேய் மாதிரி எடுத்துருக்காங்க"…"ஜூம் பண்ணிக் காட்டுங்க இன்னும் புல்லரிக்குது"… KGF 2 PUBLIC REVIEW

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யாஷ், சஞ்சய் தத் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் கேஜிஎப் 2 திரைப்படம் இன்று காலை வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Guinness Record படைத்த பாடகர்‌ வேல்முருகன் மகள்.. முதல்வரிடம் வாழ்த்து பெற்று நெகிழ்ச்சி

10000 திரைகளில்….

ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் 2'. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரி குவித்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’  திரைப்படம், இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக 10000 திரைகளில் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. கேஜிஎப் கன்னடத்தில் உருவான படமாக இருந்தாலும் ஒவ்வொரு மொழியிலும் ரசிகர்கள் அதை தங்கள் மொழிப் படமாகவே பார்க்கிறார்கள்.

நட்சத்திரப் பட்டாளம்…

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியுள்ள 'கே ஜி எஃப் 2' படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ்  நடித்திருக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

ரசிகர்களின் பாராட்டு மழையில்…

இன்று படம் வெளியாகியுள்ள நிலையில் காலை சிறப்புக் காட்சிகள் முடிந்து ரசிகர்களின் பாராட்டைப் படம் பெற்று வருகிறது. தமிழகத்தில் இந்த படம் 200 முதல் 300 திரைகளில் வெளியாகியுள்ள நிலையில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது. இந்நிலையில் முதல் காட்சி பார்த்த ரசிகர்களின் பாராட்டு மழையில் கேஜிஎப் 2 நனைந்து வருகிறது. இது சம்மந்தமாக படம் பார்த்த ரசிகர்கள் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலிடம் தெரிவித்த கருத்துகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன (வீடியோ இணைப்பில்)

ப்பா, KGF 2 நாயகனுக்கு 100 அடியில் கட் அவுட்.. அதுவும் எந்த ஏரியா'ல தெரியுமா??

"பேய் மாதிரி எடுத்துருக்காங்க"…"ஜூம் பண்ணிக் காட்டுங்க இன்னும் புல்லரிக்குது"… KGF 2 PUBLIC REVIEW வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Yash starrer KGF chapter 2 public review went viral

People looking for online information on KGF Chapter 2, KGF chapter 2 public review, KGF2, KGF2 Review, Prashanth Neel, Yash will find this news story useful.