நடிகரின் பிறந்த நாளில்.. KGF-2 முக்கிய கேரக்டர் பெயரை போஸ்டருடன் வெளியிட்ட இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சரியாக டிசம்பர் 21, 2018 அன்று, ஒரு புதிய படம் அதன் அற்புதமான திரைக்கதை, இயக்கம் மற்றும் ஆக்‌ஷனால் ஒரு வரலாற்றையே உருவாக்கியது என்று சொல்லலாம்.

ஆம்,யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்த “கேஜிஎஃப் - முதல் அத்தியாயம்!” அதன் பிரம்மாண்ட வெற்றியால்   விமர்சகர்கள் மற்றும் பிற ரசிகர்களிடையே இந்த படத்தின் இரண்டாவது தொடரை எதிர்பார்க்க வைத்தது.

கேஜிஎஃப் முதல் அத்தியாயத்தை இயக்கி வெற்றிகண்ட இயக்குநர் பிரஷாந்த் நீல், இந்த திரைப்படத்தின் இரண்டாவது அத்தியாத்தை இயக்குகிறார்.  வெகுஜன மக்களை ஈர்க்கும் புதுமையான ராக்கி எனும் இந்த கதாபாத்திரம் நாயகன் யாஷ்க்கு  ராக்கிங் ஸ்டார் எனும் பெயரை பெற்றுத் தந்ததுடன்,  கன்னட திரைப்படங்களின் முக்கிய ஐகானிக் படமாக 'கேஜிஎஃப்' மாறியது.

இதன் தொடர்ச்சியாக தான் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் “கேஜிஎஃப் - இரண்டாவது அத்தியாயம்!” உருவாகியுள்ளது. நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள கோப்ராவிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கேஜிஎஃப் படத்தின் 2வது அத்தியாத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஒருவரான பாலகிருஷ்ணா நீலகண்டபுரத்தின் பிறந்தநாளையொட்டி இயக்குநர் பிரஷாந்த் நீல், அந்த கதாபாத்திரப் பெயரைப் ஒரு போஸ்டருடன் பகிர்ந்துள்ளார்.

அதில் கேப்ஷனாக , “பாலா கிருஷ்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பாதுகாப்பான பிறந்தநாள் சின்னா! # KGFChapter2-ல் #InayathKhalil-ன் லுக் இங்கே! எல்லோரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.

 

இயக்குநர் பிரஷாந்த் நீல், பிரபாஸ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் சலார் திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படம் 2022 ஏப்ரல் 14 வெளியாகும் என  ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: இயக்குநர் விஜய் மகனுக்கு முதல் பர்த்டே... பெயர் என்ன தெரியுமா? வைரல் ஃபோட்டோஸ்!!

தொடர்புடைய இணைப்புகள்

Yash kgf 2 prashanth neel mass update of important role

People looking for online information on KGF, Kgf 2, Prabhas, Prashanth Neel, Yash will find this news story useful.