KGF படங்களின் வெற்றிக்கு பின் யாஷ் நடிக்கும் புதிய படம்.. தாறுமாறான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராக்கிங் ஸ்டார் யஷ் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertising
>
Advertising

கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப்  2 ஆகிய இரண்டு படங்களின் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியை  அடுத்து இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக யஷ் மாறியுள்ளார்.

சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு மத்திய தர குடும்பத்தில் இருந்து வந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் யாஷுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.

சமீபத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இந்த படம் கடந்தாண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டார்.

இந்த படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 134.5 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது. முதல் இரண்டு நாளில் இந்த படம் 240 கோடி ரூபாயை வசூலித்தது. இந்த படம் உலகம் முழுவதும் முதல் 4 நாளில் 546 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது.

தமிழ் நாட்டில் மட்டும் கே.ஜி.எஃப் -2  படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசானது. உலகம் முழுவது 10,000 ஸ்கிரினில் ரிலீசாகி 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

KGF படங்களுக்கு பின்னர் நடிகர் யஷ், தனது அடுத்த படம் குறித்து எந்த தகவலும் வெளியிடாமல் இருந்தார். அவருடைய அடுத்த பட அறிவிப்பை சினிமா ரசிகர்கள் பலர் எதிர் நோக்கி இருந்தனர்.

இந்நிலையில் யஷ் தனது அடுத்த 19-வது படத்தை பிரபல கன்னட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவின் KVN PRODUCTIONS நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவன தயாரிப்பாளருடன் நடிகர் யஷ் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

நடிகர் யஷ் தனது 38-வது பிறந்தநாளை (08.01.2023) கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Yash, Yash19, KGF

தொடர்புடைய இணைப்புகள்

Yash and Kvn Productions to join hands for Yash19

People looking for online information on KGF, Yash, Yash19 will find this news story useful.