Also Read | KGF CHAPTER 2 ஷூட்டிங்ல ஜாலியா சேட்டை செஞ்சுருக்காங்க.. நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பகிந்த செமயான BTS போட்டோ!
![Yash acted in tamil movie kalavani remake Yash acted in tamil movie kalavani remake](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/yash-acted-in-tamil-movie-kalavani-remake-new-home-mob-index.jpeg)
கடந்த வாரம் வியாழக்கிழமை ஏப்ரல் 14 ஆம் தேதி கிட்டத்தட்ட 10,000 திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியானது. கேஜிஎஃப் 2 திரைப்படம் , முதல் வாரம் கடந்து இரண்டாவது வாரத்திலும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறது. தமிழ்நாட்டில் இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வெளியிட்டுள்ளார்.
PAN இந்தியா ஹீரோவான யாஷ்…
கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய இரண்டு படங்களின் வெற்றியை அடுத்து இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக யாஷ் மாறியுள்ளார். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு மத்திய தர குடும்பத்தில் இருந்து வந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் யாஷுக்கு ரசிகர்கள் பாராட்டு மழைப் பொழிந்து வருகின்றனர். இதையடுத்து அவர் அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கேஜிஎஃப்-க்கு முன் யாஷ்…
கேஜிஎஃப் வெற்றி இன்று யாஷை இந்தியா முழுவதும் அறிந்த நடிகராக்கியுள்ளது. ஆனால் அதற்கு முன்பு அவர் நடித்த படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எளிமையாக உருவாக்கப்பட்டவைதான். அதில் ஒன்றாக தமிழில் விமல் ஓவியா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘களவாணி’ படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை ‘கிராதகா’ என்ற பெயரில் ரீமேக் செய்து யாஷ் நடித்துள்ளார். அவருக்கு ஹீரோயினாக ஓவியாவே நடித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
களவாணி வெற்றி…
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் 'களவானி'. யதார்த்தமான காதல் காமெடி என இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தஞ்சாவூர் வட்டாரப் பகுதி மக்களின் வாழ்க்கையை நகைச்சுவைக் கலந்து சொன்ன இந்த படம் படக்குழுவினர் அனைவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. இதன் இரண்டாம் பாகமும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8