ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 'யானை' படம் கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Also Read | பா. ரஞ்சித் இயக்கும் புதிய காதல் திரைப்படம்.. வெளியான வண்ணமயமான FIRST LOOK போஸ்டர்!
யானை படம் சென்சார் போர்டால் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. யானை படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உலகம் முழுவது 1500+ திரையரங்குகளில் இந்த படம் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது.
இந்நிலையில் படக்குழு யானை படத்திலிருந்து பார் சண்டைக் காட்சியை வெளியிட்டுள்ளது. இந்த காட்சி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டதாகும். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
யானை படத்தில் நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹரி.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யானை படத்தில் அருண் விஜய் 'ரவி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் 'ஜெபமலர்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் நிறுவனம் (ZEE5 OTT & ZEE தமிழ்) கைப்பற்றி உள்ளது. யானை படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை KKR சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
Also Read | மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்ட 'தி லெஜண்ட்' பட தமிழக உரிமை.. எம்புட்டு கோடி தெரியுமா?