'யானை' படத்தின் ரிலீஸ் நாள்.. பிரியா பவானி சங்கர் வெளியிட்ட சூப்பரான போட்டோ ஷூட் ஸ்டில்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 'யானை' படம் இன்று ஜூலை மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "கல்யாண Life-ல சிக்கல்.. ஒருத்தருக்கு Sorry சொல்லணும்" - கண்ணீர் விட்டழுத அபிஷேக் BB Jodigal 2

யானை படம் சென்சார் போர்டால் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. யானை படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவது 1500+ திரையரங்குகளில் இந்த படம் ரிலீசாகி உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

யானை படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை KKR சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன்  இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் நிறுவனம் (ZEE5 OTT & ZEE தமிழ்) கைப்பற்றி உள்ளது. 

இந்நிலையில் யானை படத்தின் ரிலீஸை ஒட்டி நடிகை பிரியா பவானி சங்கர் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு தலைப்பாக "யானை படம் உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்" என எழுதியுள்ளார் ‌.

இந்த புகைப்படங்களை பிரபல போட்டோ கிராபர் அருண் பிரசாத் எடுத்துள்ளார்.

Also Read | ‘ஆத்தங்கர மரமே’ பாட்டுல வர்ற கிராமத்து பொண்ணா இவங்க.? மாடர்ன் ட்ரெஸ்ல கலக்குறாங்களே.!

தொடர்புடைய இணைப்புகள்

Yaanai Movie Release Day Priya bhavani Shankar latest photoshoot Pictures

People looking for online information on Arun Vijay, Priya Bhavani Shankar, Priya bhavani Shankar latest photoshoot, Yaanai will find this news story useful.