வெயில் காலம்.. பிரியா பவானி சங்கர் நடத்திய போட்டோஷூட்.. காஸ்டியூம் தான் ஹைலைட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் தனது போட்டோஷூட் புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | நாய் குட்டியுடன் ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்டில் அசத்திய கீர்த்தி சுரேஷ்.. செம்ம வைரல் வீடியோ!

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். கடைசியாக ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல, பொம்மை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர்.  இந்நிலையில், யானை படம் வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார், நடிகை பிரியா பவானி சங்கர்.

அதில் ஒரு பகுதியாக  புதிய போட்டோ ஷூட் நடத்தி புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்களை புகைப்பட கலைஞர் அருண் பிரசாத் எடுத்துள்ளார்.

Also Read | போடு..விஜய் சேதுபதி நடித்த மாமனிதன்.. படத்தின் OTT உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தொடர்புடைய இணைப்புகள்

Yaanai Movie Priya Bhavani Shankar Latest Photoshoot

People looking for online information on Priya Bhavani Shankar, Priya bhavani Shankar latest photoshoot, Yaanai movie will find this news story useful.