சண்டிகர்: தி கிரேட் காளி இவருடைய இயற்பெயர் தலிப் ராணா. இவர் சுங்கச்சாவடியில் ஊழியரை அறைந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ கிளிப் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Also Read | ஜான்வி கபூர் நடிக்கும் கோலமாவு கோகிலா இந்தி ரீமேக்.. வெளியான டெரர்ரான போஸ்டர்!
காளி, WWE யுனிவர்ஸில் நன்கு அறியப்பட்டவர், அங்கு அவர் பட்டிஸ்டா, ஷான் மைக்கேல்ஸ் அண்டர்டேக்கர், ஜான் சீனா, கேன் போன்ற தொழில்முறை மல்யுத்த வீரர்களுடன் விளையாடியவர். 2021 ஆம் ஆண்டின் WWE ஹால் ஆஃப் ஃபேம் பிரிவில் இடம்பெற்றவர். 7.1 அடி உயரம் உடைய மல்யுத்த வீரர் காளி, "MacGruber," "Get Smart," மற்றும் "The Longest Yard" போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு மல்யுத்தப் பள்ளியைத் திறந்து நடத்தி வருகிறார். சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பஞ்சாப் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் காளியிடம் அடையாள அட்டையை சுங்கச்சாவடி ஊழியர் கேட்டபோது, ஊழியரை காளி அறைந்ததாக சுங்கச்சாவடி ஊழியர்கள் காளியின் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் இதுவரை எந்த போலீஸ் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று லூதியானா போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் பஞ்சாப் மாநிலம் பில்லூர் அருகே நடந்ததாக கூறப்படுகிறது.
அந்த வீடியோவில், சுங்கச்சாவடியில் இருந்த தொழிலாளர்கள் காளியின் வாகனத்தைச் சுற்றி வளைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் காணலாம்.
இச்சம்பவம் குறித்து காளி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சுய விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், சம்பவம் நடந்தபோது நான் ஜலந்தரிலிருந்து கர்னாலுக்கு பயணம் செய்தேன். சுங்கச்சாவடி ஊழியர் என்னுடன் செல்ஃபி விரும்புவதாக கூறினார் ஆனால் அதை நான் மறுத்தேன். அதனால் சுங்கச்சாவடி பணியாளர்கள் என்னிடம் தவறாக நடந்து கொள்ளத் தொடங்கினர்,இனவெறி கருத்துகளையும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்" என காளி அந்த வீடியோவில் கூறினார்.
Also Read | அமெரிக்க காட்டுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டம்.. மனைவி தீபிகா படுகோனே உடன் ரன்வீர் சிங் ADVENTURE!