WWE ஸ்காட்டிஷ் வாரியருடன் நடிகர் கார்த்தி.. TAG TEAM மேட்ச்-ஆ இருக்குமோ? வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி, WWE வீரர் Drew McIntyre உடன் இணைந்து ஒரு வீடியோவில் தோன்றியுள்ளார்.

WWE Drew McIntyre with Actor Karthi and John Abraham Viral Video
Advertising
>
Advertising

 நடிகர் கார்த்தி, WWE ப்ரோமோஷன் நிகழ்வுகளில் முதல் முறையாக தோன்றியுள்ளார், இன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ப்ரோமோஷன் வீடியோவில், வங்கிக் கொள்ளை கூட்டத்தை முறியடிக்க பிரபல WWE வீரர் ஸ்காட்டிஷ் வாரியருடன் இணைந்து (WWE மொழியில் Tag Team) கார்த்தி சண்டை செய்துள்ளார்.

இந்த வீடியோவில், முகமூடி அணிந்த கொள்ளையர்கள் சிலர் துப்பாக்கி முனையில் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர், அப்போது வங்கி மேலாளர் பாதுகாப்பு பொத்தானை அழுத்தும் போது அலாரம் ஒலிக்கிறது.

WWE Drew McIntyre with Actor Karthi and John Abraham Viral Video

​​காவல்துறைக்கு பதிலாக, கார்த்தியும் ஸ்காட்டிஷ் வாரியரும் அந்த வங்கியை காப்பாற்ற உள்ளே நுழைகிறார்கள். உள்ளே நுழைந்ததும் கொள்ளையர்களை WWE ஸ்டைலில் சண்டையிட்டு வங்கியை மீட்கின்றனர். இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வீடியோவின் தமிழ் & தெலுங்கு வெர்சனில் கார்த்தியும், இந்தி வெர்சனில் ஜான் ஆபிரகாமும் தோன்றியுள்ளனர்.

'விருமன்'  'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' படங்களின் வெற்றிக்கு பிறகு கார்த்தி தற்போது ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் ராஜூ முருகன் இயக்கி வருகிறார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படம் நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாக உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

WWE Drew McIntyre with Actor Karthi and John Abraham Viral Video

People looking for online information on Drew McIntyre, Karthi, Scottish Warrior, WWE will find this news story useful.