வீட்ல பெருசா சண்டை எதுவும் நடக்கலையே என பிக்பாஸ் ரூம் போட்டு யோசித்தார் போல. கடைசியில் வில்லங்கமான வரிசைப்படுத்தும் நிகழ்வை சொல்லி போட்டியாளர்களை நன்றாக அடித்துக்கொள்ள வைத்து விட்டார். பாலாஜி முருகதாஸ், சனம் இடையே நேற்று நடந்த சண்டை தான் ஹைலைட். இதேபோல அனிதாவும் நான் அங்க எல்லாம் நிக்க முடியாது என சொல்லி 10-ம் நம்பரில் நிற்க மறுத்து விட்டார்.
அவர் டாஸ்க்கை நன்றாக செய்தாலும் கூட தானே போனை கட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சனம், சம்யுக்தாவுக்கு கால் மட்டுமே செய்து பேசினார். பதிலுக்கு அவருக்கு யாரும் கால் செய்து பேசவில்லை. போட்டியாளர்களின் எண்ணிக்கை ஒன்று குறைவாக இருந்ததும் இதற்கு ஒரு காரணம். சனம் இதை சொல்லி 2-வது இடத்தில் நிற்க பாலாஜியால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
பாலாஜி, ஆரி போல சனமும் தனது விளையாட்டை தானே தான் விளையாடுகிறார். ஆனால் எப்போதும் சனமை மட்டம் தட்டும் பாலாஜி நேற்றும் அப்படி செய்ய, பொங்கியெழுந்த சனம் அது என்னோட பிரச்சினை இல்லை என்று பாலாஜியை வறுத்து எடுத்து விட்டார். ஒரு கட்டத்தில் பாலாஜி தன்னுடைய செருப்பை எடுத்து தானே அடித்து கொண்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஆரி விஷயத்திலும் இப்படித்தான் பண்ணாரு என அவரை ரோஸ்ட் செய்து வருகின்றனர்.