‘NEVER SURRENDER’.. வேற லெவல் MONEY HEIST SEASON 5 டிரைலர் VIDEO! ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மணி ஹீஸ்ட் சீசன் 5-ன் டிரெய்லர் ஆகஸ்ட் 2-ல் வெளியாகும் என நெட்ஃபிளிக்ஸ் கடந்த 27 ஆம் தேதி அறிவித்திருந்தது.

அதன்படி நெட்ஃபிளிக்ஸின் இந்த படு சென்சேஷனல் வெப்சீரிஸின் 5வது சீசனுக்கான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அலெக்ஸ் பினாவின் ஹிட் ஸ்பானிஷ் இறுதி சீசனாக இந்த 5வது சீசன் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

46-வது சர்வதேச எம்மி விருதுகள் பெற்றுள்ள இந்த தொடர், 2018 ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத மொழித் தொடராகவும், சாதனை படைத்துள்ளது.

வங்கியில் கொள்ளை அடிப்பதை கதைக் களமாக கொண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த சீரிஸின் முதல் 2 சீசன்கள் யூரோ கரன்சிகளை அச்சடிக்கும் இடத்தைச் சுற்றியும், அடுத்த 2 பாகங்கள் ஸ்பெயின் நாட்டு அரசின் தங்கத்தை கொள்ளையடிப்பதை வைத்தும் எடுக்கப்பட்டது.

இந்த சீரிஸில் வரும், புரோபசர், லிஸ்பன், டோக்கியோ, நைரோபி, மாஸ்கோ, ரியோ என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இந்த சீரிஸின் 5 ஆவது சீசனின் முதல் பகுதி செப்டம்பர் 3 ஆம் தேதியும், இரண்டாம் பகுதி டிசம்பர் 3 ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘NEVER SURRENDER’.. வேற லெவல் MONEY HEIST SEASON 5 டிரைலர் VIDEO! ரிலீஸ் எப்போ? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Worldwide netflix Series Money Heist Season 5 Trailer released

People looking for online information on Money Heist, Money Heist Season 5, MoneyHeistSeason5 will find this news story useful.