பிரபல முன்னணி தொலைக்காட்சியில் முதல் முறை ஒளிபரப்பாகும் AVV..எப்போ? எதுல? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொலைக்காட்சியில்  “ஆனந்தம் விளையாடும் வீடு” படம் ஒளிபரப்பாக உள்ளது.

Advertising
>
Advertising

ஜீ தமிழ் தொலைக்காட்சி தமது நேயர்களை புரிந்துகொண்டு, ரசிகர்கள்  எதிர்பார்க்கும் அற்புதமான நிகழ்ச்சிகளையும், தரமான திரைப்படங்களையும் வழங்கி  அவர்களின் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்து, ஆச்சரியமூட்ட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளது.

வரும் மார்ச் 27 மதியம் 3:30 மணிக்கு உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சூப்பர்ஹிட் குடும்ப சித்திரம் “ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படத்தை ஒளிபரப்ப உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.

நந்தா பெரியசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த குடும்பச் சித்திரத்தில் கௌதம் கார்த்திக் (சக்திவேல்) மற்றும் அறிமுக நடிகை சிவத்கிமா ராஜசேகர் (விஜி) ஆகியோர் கதையின் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.

காசியப்பன் மற்றும் முத்துப்பாண்டி ஆகிய இரண்டு ஒன்றுவிட்ட சகோதரர்களின் வாழ்க்கையை இத்திரைப்படம் கூறுகிறது. காசியப்பனாக நடிகர் சரவணன் முத்துப்பாண்டியாக நடிகர் மற்றும் இயக்குனர் சேரன் ஆகியோர் நடித்துள்ளனர். 30 உறுப்பினர்கள் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தை ஒரே இடத்தில் வாழ வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு பிரம்மாண்ட வீடு கட்டுவதை இருவரும் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

இத்திரைப்படத்தில், ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டு ஒற்றுமையுடனும், எந்தவொரு சண்டை சச்சரவுகளும் இல்லாமல் வாழ்க்கையை வாழும், பல்வேறு  கதாபாத்திரங்களின்  மூலம் கூட்டுக் குடும்பத்தின் பாசம் குறித்து பெருமையுடன் கூற விரும்பும் இயக்குனரின் நோக்கம் அழகாக வெளிப்படுகிறது.

சேரன், சரவணன், மொட்டை ராஜேந்திரன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், மௌனிகா, சுசன் ஜார்ஜ், மற்றும் சௌந்தரராஜா போன்ற அற்புதமான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது இத்திரைப்படத்தின் அம்சமாகும்.

தொடர்புடைய இணைப்புகள்

World television premiere of AVV movie at zee tamil

People looking for online information on AVV, Cheran, Gautham Karthik, Zee Tamil will find this news story useful.