தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித் நடிப்பது மட்டுமல்லாமல், பிற துறைகளிலும் நல்ல ஆர்வம் கொண்டவர். குறிப்பாக ஏரோ மாடலிங், போட்டோகிராபி, துப்பாக்கி சுடுதல், கார் ரேசிங் குறிப்பிடத்தக்கவை.

தல அஜித் எடுத்த புகைப்படங்கள், புகைப்பட கண்காட்சியிலும் இடம் பெற்றுள்ளன.
இன்று உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு தல அஜித் அவர்கள் எடுத்த புகைப்படங்களின் சிறப்பு தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. சென்னை நகரில் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்
2. தல அஜித்தின் ஆஸ்தான ஸ்டில் போட்டோகிராபர் சிற்றரசு
3. என்னை அறிந்தால் படப்பிடிப்பின் பொழுது எடுக்கப்பட்ட ஜோத்பூர் நகரம்
4. வேதாளம் படத்தின் Don't You Mess With Me பாடல் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம்
5. வேதாளம் படப்பிடிப்பின் நடுவே கொல்கத்தாவில் எடுத்த புகைப்படங்கள்
6. விவேகம் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
7. நடிகை ஷாம்லிக்காக தல அஜித் நடத்திய பிரத்யேக போட்டோ சூட்
8. என்னை அறிந்தால் படத்தின் ஒளிப்பதிவாளர் டான் மெக்கார்தர்
9. நடிகர் அப்புக்குட்டிக்காக பிரத்யேகமாக தல அஜித் நடித்திய போட்டோ சூட்
10. ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா மற்றும் பார்வதி நாயர்
தற்போது அஜித் நடிக்கும் வலிமை படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்குகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.