பெண்களின் திருமண வயது 21ஆக உயர்வு..நெகிழ்ந்து பாராட்டிய திரௌபதி பட இயக்குனர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பெண்களின் சட்டபூர்வமான திருமண வயதை 18 இல் இருந்து 21ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களின் சுயமாக முடுவெடுக்கும் திறன், முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் அரசு பல முடிவுகள் எடுக்கின்றது. திருமணம் என்ற காரணத்தினால் அவர்களின் கனவுகள் தடை ஆகக்கூடாது என்று எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு பல ஆதரவுகள் குவிந்து வருகின்றது.

Advertising
>
Advertising

இந்த முடிவை பாராட்டும் வகையில் பல முன்னணி இயக்குனர்களும் தங்களது வரவேற்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி,ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி, அவரது ஆதரவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ருத்ர தாண்டவம் படத்தில் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்தார். இவரது அடுத்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் லீட் ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் திருமண வயதை மாற்றியதற்கு இவர் அளித்த ஆதரவுக்கு பல ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அதே போல் அரசு எடுத்த இந்த முடிவுக்கு பல சினிமா நட்சத்திரங்களும் தங்களது முழு ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Womens wedding age changed, celebrities appreciates the decision

People looking for online information on Marriageage, Weddingage, Women will find this news story useful.