திரைப்படத் துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மரியாதைக்குரிய Behindwoods gold medals விருதுகள் மக்களுக்கு அபிமானவை.
Also Read | தாய்லாந்தில் ஜாலியாக ஊர் சுற்றும் விக்கி - நயன்.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஹனிமூன் PHOTOS
சமூக சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods gold Icons - Honour of Inspiration, இசை மற்றும் பாடல் துறை சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods mic awards மற்றும் Behindwoods விருதுகளின் மற்றுமொரு அங்கமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Digital & TV Awards) வழங்கும் விழாக்களும் ஏகோபித்த நன்மதிப்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது 8வது Behindwoods Gold Medals விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நிகழ்ந்தது.
இந்நிகழ்வுக்கு வேற லெவலில் வேட்டி கட்டிய தமிழராகவே மாறி வந்திருந்தார் பிரபல தென்னிந்திய முன்னணி நடனக்கலைஞர் ஜானி மாஸ்டர். அவருக்கு பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் 8வது எடிஷன் வழங்கும் “சிறந்த நடன இயக்கத்துக்கான” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதில் அப்போது பேசிய ஜானி மாஸ்டர், “நான் நடன இயக்குனராக அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக நடனம் ஆடுவதை இயக்க வேண்டும். நீங்கள் திரை அரங்கில் காணவேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, விஜே பிரியங்கா, “உலகம் முழுக்க அந்த கோரிக்கையே இருக்கிறது சார். எங்களுக்கும் அந்த கோரிக்கை இருக்கிறது சார்.” என்று குறிப்பிட்டார். இதனை அடுத்து ஜானி மாஸ்டர் தாம் பெற்ற கௌரவ விருதினை மனைவிக்கு அணிவித்து மகிழ்வித்து மகிழ்ந்ததுடன், மனைவி குழந்தையுடன் கெத்தாக வேட்டி சட்டையில் ராம்ப் வாக் சென்றார்.
Also Read | அடடே.. ‘மாமனிதன்’ படத்துல விஜய் சேதுபதியின் மகனா நடிச்சது இந்த இயக்குநரின் மகனா.?