VIDEO: "அந்த SHOW-ல WIN பண்ணா 1 கோடி ரூபா.. அம்மாவுக்காக இத செய்யணும்.. " - SREENIDHI உருக்கம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிஹைண்ட்வுட்ஸ் டிவிக்காக ஷகிலா எடுத்த நேர்காணலில் நடிகை ஸ்ரீநிதி நிறைய விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | Video: “Love பண்ணேன்.. எனக்காக 16 நாள் குடிக்காம இருந்தான்.. ” - Sreenidhi பேட்டி | shakeela

அதில் முதலில் ஷகிலா பேசும் பொழுது, “சிம்பு உன்னை காதலித்ததாக சொல்லிக் கொண்டிருந்தாய்.. இப்போதும் அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறாயா.?” என்று கேள்வி கேட்கிறார். இந்த கேள்விக்கு ஸ்ரீநிதி சொன்ன பதில்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன.

அதன்படி சின்னத்திரை பிரபலமான ஸ்ரீநிதி, ஷகிலா கேட்ட கேள்விப்படி சிம்பு தன்னை காதலிப்பதாக சொன்ன கூற்று உண்மைதான் என்று முதலில் ஒப்புக் கொள்கிறார். மேலும் பேசியவர், “ஆனால் இப்போது நான் அந்த நிலைப்பாட்டில் இல்லை. நான் அப்போது எமோஷனலாக இருந்தேன். அப்போது சிம்பு என்னை லவ் பண்ணியதாக நானாகவே நினைத்துக் கொண்டேன். கற்பனை பண்ணிக் கொண்டேன். அது என்னுடைய இமேஜினேஷன் தான்.” என்று கூறினார்.

மேலும் பேசியவர், “ஆனால் பிறகு யோசித்துப் பார்த்தேன். உண்மையிலேயே சிம்பு என்னை அப்படி லவ் பண்ணி இருந்தால், அவர் ஏன் இப்படி ஒரு சூழ்நிலையில் எதையெதையோ பற்றி ட்விட்டரில் பேசுகிறார். என்னை பற்றி யோசிக்காமல் இருக்கிறார் என்று யோசித்தேன். தற்போது நான் அந்த கற்பனையில் இருந்து வெளியே வந்து விட்டேன். சிம்புவை நான் காதலிக்கவில்லை, சிம்புவும் என்னை காதலிக்கவில்லை. ஆனால் எனக்கு சிம்புவை பிடிக்கும்.” என்று சொல்லிவிட்டார்.

அதன் பின்னர் நடிகை ஷகிலாவிடம் தன் தாயார் பற்றி பேசிய ஸ்ரீநிதி, “என் அம்மா என்ன புரிஞ்சுப்பாங்க. அவங்க தேங்காய் பிஸினஸ் பண்றாங்க.. எனக்கு ஜீ தமிழ் சர்வைவர் ஷோவில் கலந்துகிட்டு 1 கோடி ரூபாய் ஜெயிச்சு அவங்களுக்கு ஒரு வீடு கட்டி கொடுக்கணும். என்னை பரிந்துரைக்கிறீங்களா? ப்ளீஸ்” என்று கேட்டதும், ஷகிலாவும், “சரி.” என்று சொல்லி அவரை தேற்றுகிறார்.

Also Read | Video: "Love பண்ணது என்னோட Imagination தான்" - Sreenidhi பேட்டி | shakeela

VIDEO: "அந்த SHOW-ல WIN பண்ணா 1 கோடி ரூபா.. அம்மாவுக்காக இத செய்யணும்.. " - SREENIDHI உருக்கம்.! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Wish to be in survivor show Sreenidhi shakeela interview

People looking for online information on Shakeela, Shakeela Sreenidhi interview, Sreenidhi, The Controversial Show will find this news story useful.