தனுஷின் 'கேப்டன் மில்லர்' .. இணைகிறாரா பிரபல கன்னட சூப்பர் ஸ்டார்? அடுத்தகட்ட ஷூட் எப்போ..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் குறித்த பிரத்யேக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

Advertising
>
Advertising

Also Read | THUNIVU: இயக்குனர் H. வினோத்தை சந்தித்த பிரபல சார்பட்டா பட நடிகர்.. வைரல் ஃபோட்டோ!

நடிகர் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம்  ‘கேப்டன் மில்லர்’ படத்தினை தயாரிக்கிறது. ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்க உள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும்  பீரியட் படமாக உருவாகவுள்ளது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜான் கொக்கன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டர் நாகூரன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, த.ராமலிங்கம் கலை இயக்குனராக பணிபுரிய உள்ளார். பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் ஆகியோர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றனர். மாஸ்டர் திலீப் சுப்பராயன், சண்டை காட்சி இயக்கத்தை கவனிக்க உள்ளார், Tuney John பப்ளிசிட்டி டிசைனராக  பணிபுரிய உள்ளார். இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் தனுஷ், ஜான் கொக்கன் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேப்டன் மில்லர்  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

Also Read | படப்பிடிப்பில் சமையல் செய்து அசத்திய சூர்யா & மம்மூட்டி.. ரசிகர்களை கவரும் சூப்பர் போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Will this popular actor join in Dhanush Captain Miller

People looking for online information on Captain Miller, Dhanush, Dhanush Captain Miller will find this news story useful.