இந்தத் தேதியில் இருந்து தியேட்டர்ஸ் திறக்கபடுகிறதா ? - அரசுக்கு முன்வைத்த 5 கோரிக்கைகள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாடு முழுவதும் மூன்றாவது முறையாக மத்திய அரசு மே 17 வரை மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. இருப்பினும் வணிகம் சார்ந்த சில செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட விஷயங்கள் மீண்டும் செயல்படுவது பற்றி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. குறிப்பாக திரையரங்குகள் எப்பொழுது திறக்கப்படும், புதிய கட்டுப்பாடுகள் என்ன என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் பிரபல திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நமது தமிழக முதல்வர் வருகிற மே 25 அல்லது ஜூன் 1 திரையரங்கம் திறப்பதற்கான காலமாக இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். கொரோனாவினால் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். திரையரங்கம் திறந்தவுடன் உடனடியாக மக்கள் வரப்போவதில்லை.

மேலும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 5 கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். அதில் முதலாவது, ஆபரேட்டர் லைசென்ஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். 2. ஆண்டுக்கொரு முறை லைசென்ஸ் புதுப்பித்தல் என்ற முறையை மாற்றி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை லைசென்ஸ் புதுப்பித்தல் முறையை அளிக்கவேண்டும்.

3. செயல்பட்டுக்கொண்டிருக்கிற திரையரங்குகளை மாற்றி, சின்ன திரையரங்குகளாக மாற்ற, கலெக்டரிடமும் PWD-இடமும் அனுமதி பெற்றால் போதும் என்ற ஆர்டர் அளிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் படங்கள் திரையிடுவதற்கு எங்களுக்கு சௌகரியமாக இருக்கும். லோக்கல் பாடி டாக்ஸ் தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும். 5. புதிய திரையரங்குகள் வரும் போது, 10 சதவீதம் இடம்  எண்டர்டெயின்மென்ட் இன்டஸ்ட்ரியான திரையரங்கம் வழங்க தேவையில்லை என தமிழக முதல்வர் சொல்லியிருந்தார்கள். அதற்கான ஆர்டரை வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை முதலவர், துணை முதல்வர், செய்தித்துறை அமைச்சர் ஆகியோருக்கு அளிக்கவிருக்கிறோம். மேலும் இது அறிக்கையாகவும் பத்திரிக்கைகளுக்கு செய்தி அளித்து விடுவோம். இதற்கு உங்கள் சம்மதம் தேவை. என்பதை நானும் சங்கத்தின் பொதுச்செயலாளரும் நினைக்கிறோம். என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Will theatres in TN open from June 1? Tiruppur Subramaniam Request Government | திரையரங்கம் திறக்கப்படும் தேதி குறித்து வெளியான தகவல்

People looking for online information on Coronnavirus, Lockdown, Theatre will find this news story useful.