பிரபல முன்னணி ஹாலிவுட் திரைப்பட ஹீரோ வில் ஸ்மித், தற்போது தான் எழுதியுள்ள சுய சரிதை புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களும் சம்பவங்களும் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன.
நடிகர் வில் ஸ்மித் தற்போது கிங் ரிச்சர்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ரெனால்டோ மார்கஸ் கிரீன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் வில் ஸ்மித், ரிச்சர்ட் வில்லியம்ஸ் என்னும் கதாப்பாத்திரமாக நடிக்கிறார். அதாவது டென்னிஸ் வீரர்களான வீனஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸின் தந்தை மற்றும் பயிற்சியாளரான ரிச்சர்ட் வில்லியம்ஸ் கதாபாத்திரத்தில் தான், வில் ஸ்மித் நடிக்கிறார்.
இந்நிலையில் வில் ஸ்மித், தான் தற்போது எழுதியிருக்கும் ‘Will’ எனும் சுய சரிதை புத்தகத்தில் தன் மனைவியுடனான ஒரு ஏடாகூடமான போட்டியை வைத்தது குறித்து பகிர்ந்துள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு நாளும் மனைவி ஜேடாவுடன் பலமுறை உடலுறவு பூண்டதாகவும், மேலும் தொடர்ச்சியாக 4 மாதம் ஒரு போட்டியில் ஈடுபடுவது போல அதனை செய்ததாகவும் குறிப்பிட்டவர், அந்த போட்டியில் ஒன்று ஜேடாவை தாம்பத்யத்தில் திருப்திப் படுத்த வேண்டும், இல்லையெனில் இந்த போராட்டத்தில் செத்துவிடவேண்டும் என்றிருந்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து வில் ஸ்மித், ஓப்ரா எனும் நிரூபருக்கு அளித்த பேட்டியில் விவரித்தபோது, ஓப்ரா, “நீங்கள் இறக்கவில்லை என்பதால் அந்த போட்டியில் ஜெயித்துவிட்டீர்கள் என நம்புகிறேன்” என கிண்டல் அடித்திருக்கிறார்.
இதேபோல் இன்னொரு விஷயத்தையும் வில் அப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “
நான் மிகவும் மதம் சார்ந்த குடும்பத்தில் வளர்க்கப்பட்டேன், என் பாட்டி ஜிகி இயேசுவுக்கு எப்போதும் பக்தியுடன் இருப்பார். அவருக்கு ஜேடா யார் என்று தெரியாது. அப்படி ஒரு சமயம் என் குடும்பத்தினரை சந்திக்க ஜேடா முதன் முதலில் வருகை தரவிருந்தார். அப்போது எனது பாட்டியின் முன்னால், ஜேடா நடித்த வீடியோவை போட்டுக் காட்டி அவரை எண்ணி இன்பத்தில் லயித்திருப்பதாக பிராங்க் செய்தேன்!. பாட்டிக்கோ ஜேடா யாரென்றே தெரியாது.! இருவரும் சந்தித்தபோது இருவருக்கும் நடந்த உரையாடல் மிகவும் வேடிக்கையானதாக இருந்தது.
ஆனால் பின்னாட்களில் அதை நினைத்து பார்த்தால் சிரிப்பாக இருக்கும் என்பதற்காக அதை செய்தேன். எனினும் 27 ஆண்டுகளுக்குப் பிறகும் அது வேடிக்கையான ஒரு செயலாகவே செய்யப்பட்டது என்பதை ஜேடாவுக்கு நிரூபிக்கத் தவறிவிட்டேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக விடலை வயதில் பிரிந்த தன் காதலை மறக்க முடியாமல் துயருற்றிருந்த வில் ஸ்மித் பல பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டதாக பதிவு செய்ததுடன், பின்னர் பெருவுக்குச் சென்று அமேசான் காடுகளிலிருந்து அயவாஸ்கா என்னும் மருந்தை உட்கொள்ளத் தொடங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த மருந்தை, நிறைய பெண்களுடன் இருக்கும் ஹரம் போன்ற உணர்வைத் தருவதற்காக உட்கொண்டதாக குறிப்பிட்டுள்ள வில் ஸ்மித், பின்னாளில் தன் மனைவி ஜேடாவை பிரிந்த பின்னும் நூறு சதவீத ஒற்றுமையுடனும் இருப்பதாக குறிப்பிடும் வில் ஸ்மித், அதே சமயம் இருவரும் சுதந்திரமாகவும், ஜேடா சந்தோஷமாக இருப்பதாகவும், அதுதான் தான் விரும்புவது என்றும் தெரிவித்துள்ளார்.