வெள்ளி கிழமை நாயகன், யூடியூப்பர்ஸ் சூப்பர் ஸ்டார் என தமது ரசிகர்களால் அழைக்கப்படுவர் நடிகர் கூல் சுரேஷ்.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | Vijay Antony : உடல்நிலை குறித்த தகவலுடன் பிச்சைக்காரன் -2 அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி!
சில திரைப்படங்களில் நடித்துள்ள கூல் சுரேஷ், ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும், தியேட்டர் வாசலில் வித்தியாசமான கெட்டப்புகளில் வந்து விளம்பரம் செய்து ட்ரெண்ட் ஆனவர். இவர், சென்னையில் பி.வி.ஆர் சினிமாஸ் நிறுவனத்தின் புதிய திரையரங்கு திறப்பு விழாவில் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடையே அவர் பேசும்போது, “பகாசூரன் கை கொடுக்கவில்லை என்றால், தியேட்டர் வாசலில் பிச்சை எடுக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன். அதற்கும் சிலர் கமெண்ட்டில் வந்து ‘டே பிச்சை எடுடா’ என்று தான் சொல்வீர்கள்’- கூல்சுரேஷ்
என்னை பலரும் கமெண்ட்டில் திட்டுறீங்க. படம் பார்த்துவிட்டு நான் ஏதாவது பேசினால், என்னை திட்டுவீங்க. என் தலையெழுத்து நான் திட்டுவாங்குறேன். ஆனால் அப்படியாவது உங்களை மகிழ்விக்கிறேன்.
ஏர்போட்டு உள்ள தியேட்டர் இருக்கும்னுவாங்க, ஆனால் பி.வி.ஆர்., தியேட்டர் உள்ளே வந்தா ஏர்போர்ட் மாதிரி இருக்கும். தியேட்டர் வாசலில் இருந்து இப்போது தியேட்டருக்குள் வந்திருக்கிறேன். ஆனால் அந்த திரையில் நடிகனாக வலம் வரும் பாக்கியம் வருமா மீண்டும் என தெரியவில்லை. அதே தியேட்டருக்குள் டார்ச் லைட் அடித்து செக் பண்ணும் ஊழியராக போகிறேனா என தெரியவில்லை.
தை பிறந்துவிட்டது வழி பிறக்குமா என தெரியவில்லை. விரைவில் ஸ்கிரீனில் வருவேன் என நம்புகிறேன். வரும் 17 ம் தேதி நான் நடித்த பகாசூரன் திரைப்படம் ரிலீஸ். அந்த படம் எனக்கு வொர்க் அவுட் ஆன, தொடர்ந்து படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கும், நான் நடித்த காட்சிகள் எப்படி இடம்பெற்றுள்ளது என தெரியவில்லை. ஆனால் அந்த படத்தில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்றால், சினிமாவை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை. நான் மிகவும் போராடிவிட்டேன். இனிமேல் போதும்.
சிலர் கமெண்டுகளில் தியேட்டர் வாசலில் பிச்சை எடு என சொல்வீர்கள். அதைத்தான் செய்யலாம் என இருக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
Also Read | லோகி யூனிவர்ஸ்..!! தளபதி விஜய்யை சந்தித்த சந்தீப் கிஷன்.. தீயாய் பரவும் ஃபோட்டோ.. Trending