KGF 3 படப்பணிகள் விரைவில் தொடங்குமா..? - மனம் திறந்த நடிகர் யஷ் .. பரபரப்பு விளக்கம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், கன்னட நடிகர் யஷ் நடித்திருந்த திரைப்படங்களான 'KGF 1' மற்றும் 'KGF 2' ஆகியவை, கன்னட திரை உலகை தாண்டி இந்திய அளவிலும் சக்கை போடு போட்டது.

Advertising
>
Advertising

இதில், KGF திரைப்படத்தின் இரண்டாம் பாகம், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகி, பாக்ஸ் ஆபீஸில் பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கியத்துடன் ஒட்டுமொத்த இந்திய திரை உலகையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது.

இதன் காரணமாக, பேன் இந்தியன் ஸ்டார் ஆகவும் வலம் வந்திருந்தார் நடிகர் யஷ். அது மட்டுமில்லாமல், KGF 3 படம் உருவாகும் என்பது குறித்த எதிர்பார்ப்பையும் KGF 2 படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் எகிற வைத்திருந்தார் பிரசாந்த் நீல். இதனால், KGF 3 படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற ஆவலிலும் ரசிகர்கள் உள்ளனர்.

அது மட்டுமில்லாமல், இந்திய அளவில் அதிக கவனத்தை நடிகர் யஷ் ஈர்த்துள்ளதால், அவர் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்து அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்த நடிகர் யஷ், KGF 3 குறித்து சில தகவல்களை தற்போது தெரிவித்துள்ளார். KGF 3 குறித்து பேசிய யஷ், "நிச்சயம் விரைவில் KGF 3 படத்தை தொடங்க போவது இல்லை. இதுபற்றி நிறைய வதந்திகள் வருகிறது. ஆனால், எங்களிடம் ஒரு ஆலோசனையும், திட்டமும் உள்ளது. ஆனால், நான் வேறு ஏதாவது செய்ய விரும்புகிறேன். ஏனென்றால், கடந்த 6,7 வருடமாக நான் இதை (KGF படத்தின் பணிகள்) செய்து கொண்டிருக்கிறேன். ஒரு சிறிய இடைவெளி எடுத்துவிட்டு, எல்லாம் சரியாக அமையும்போது நாங்கள் பின்னர் அதை செய்வோம். ஆனால் நிச்சயம் KGF 3 படத்திற்காக கூடிய சீக்கிரம்லாம் பணிபுரிய போவதில்லை" என தெரிவித்துள்ளார்.

அதேபோல தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருவதாகவும், வேறு சில ஸ்கிரிப்ட் டிஸ்கஷன்கள் சென்று கொண்டிருப்பதாகவும் யஷ் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய இணைப்புகள்

Will KGF Chapter 3 get start soon ? here is Yash answer

People looking for online information on KGF Chapter 2, KGF Tamil, Yash will find this news story useful.