“கொளுத்திடுறேன்! யாருன்னு தெரியட்டும்!”.. கடுப்பான நிரூப்.. இசைவாணியிடம் போன பஞ்சாயத்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் என்றாலே அனைவரும் பயந்து விடுகின்றனர். விரும்பும் உணவுகள் சரிவர கிடைப்பது தான் இதில் மிக முக்கியமாக இருக்கிறது.

will burn them niroop anger isaivaani sort out biggboss5 issue
Advertising
>
Advertising

தற்போது பிக்பாஸ் வீட்டில் சிலர் வில்லேஜ்காரர்களாகவும் சிலர் நகர வாசிகளாகவும் மாறி இருக்கின்றனர். குறிப்பாக கிராமவாசிகளாக ராஜூ, அக்ஷரா, சின்னப்பொண்ணு, தாமரை மற்றும் பலர் இருக்க நகர வாசிகளாக நீருப், வருண் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதில் நகரவாசிகள் அவ்வபோது பிரெட் ஆம்லெட் சாப்பிடுவது உள்ளிட்டவற்றை செய்ய, அக்ஷரா உள்ளிட்ட கிராம வாசிகளுக்கு வெறுப்பு ஏற, அக்ஷராவும் மதுமிதாவும் பிளான் பண்ணி நிரூப்பின் பிரட்டை எடுத்து மறைத்து வைத்து விட்டனர்.

will burn them niroop anger isaivaani sort out biggboss5 issue

இதனால் கொஞ்சம் கடுப்பாக சுற்றிக்கொண்டிருந்த நிரூப், பிரெட்டை வெவ்வேறு இடங்களில் தேடி பார்த்துவிட்டு, ஒரு கட்டத்தில்  “பிரெட் மட்டும் கிடைக்கட்டும் யார் என்று தெரிந்தால் கொளுத்திடுறேன்!” என்று பேசத் தொடங்கிவிட்டார்.

இறுதியாக இந்த வார கிச்சன் பொறுப்பிலிருக்கும் இசைவாணியிடம் பஞ்சாயத்து சென்று விட்டது. இந்த வாரம் முழுவதும் நெருப்பு ஆற்றல் வாரம் என்பதாலும்,  இசைவாணியிடம் நெருப்பு காயின் இருக்கிறது என்பதாலும் அவர் கிச்சனை ரூல் செய்துகொண்டிருக்கிறார்.

இந்த பஞ்சாயத்து இசைவாணியிடம் செல்ல, அவரோ, “எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் உணவை தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டு இருக்காதீர்கள்... பார்ப்பவர்களுக்கு அது தவறாக தெரியும்.. மேலும் நான் சில ரூல்ஸ் விதிப்பேன் அவற்றுக்கு கொஞ்சம் கட்டுப்பட்டு நடந்தால் நல்லது,. நான் பொறுப்பை சரியாக செய்ய வேண்டும் என்று நினைப்பதால் அவ்வப்போது கொஞ்சம் கடிந்து கொள்வது போல் பேசினால் அட்ஜஸ் செய்து கொள்ளுங்கள். நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள். என்னை கேட்காமல் சமைக்கும் விஷயத்தில் எதுவும் பண்ணாதீர்கள்!” என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை கன்ஃபெஷ்ன் ரூமுக்கு அழைத்து பிக்பாஸ் இசைவாணியிடமும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பிரெட் பஞ்சாயத்தில், யார் திருடி வைத்தது என்று இசைவாணி கேட்க, அக்ஷரா வந்து முழு கதையையும் சொல்ல தொடங்கினார். மேலும் தன்னை முதலிலிருந்து முழுதாய் சொல்ல விட்டால்தான் பதில் சொல்லுவேன் என்று அக்ஷரா விளையாட்டாக பேசத் தொடங்கிவிட்டார். அதன்படி பிரெட் ஆம்லெட்டை சாப்பிட்டு வெறுப்பேற்றியதால்தான் தாங்கள் பிரட்டை திருடி வைத்ததாக கூறிவிட்டார்.

அதன் பின்னர் ராஜூ அட்வைஸ் பண்ணியதால் பிரெட் இருக்கும் இடத்தை நிரூப்பிடம் சிரித்துக்கொண்டே அக்‌ஷரா காண்பித்துவிட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Will burn them niroop anger isaivaani sort out biggboss5 issue

People looking for online information on Abhinav, Abishek Raaja, AbishekRaaja RajuJeyamohanAksharaReddy PriyankaDeshpande, Akshara Reddy, அபிஷேக், இமான் அண்ணாச்சி, பிக்பாஸ், விஜய் டிவி BBTamilSeason5, Biggboss abishek, Biggbosstamil, BiggBossTamil5, Chinnaponnu, GrandLaunch, Ikky Berry, ImmanAnnachi, Isaivani, Kamalhassan, Master Cibi, Pavani Reddy, Raju, Thamarai Selvi, Varun, VijayTelevision, VJ Priyanka will find this news story useful.