BiggBossUltimate: பிக்பாஸ் நிகழ்ச்சி டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிறது. பிக்பாஸ் அல்டிமேட் எனும் பெயரில் இந்த ஓடிடி திய நிகழ்ச்சி நாளும் நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் அல்டிமேட்
இதில் தற்போது போட்டியாளர்களுக்கு திருடன் போலீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் சிலர் திருடர்களாகவும், சிலர் போலீஸாகவும் வேடம் தரித்திருக்க, திருடர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஓடிசென்று பொருட்களை எடுக்கவும், அபகரிக்கவும் செய்கினறனர். திருடர்கள் என்ன செய்வார்கள்? பொருட்களை எடுத்துக்கொண்டு ஓட வேண்டும். அப்படி கண் முன் தெரியாமல் ஓடும்போது அங்கங்கு விழுந்து வாருகின்றனர்.
பெர்சனல் பொருட்கள்
பாலா உள்ளிட்ட சிலர், ஓடும்போது சில பர்னிச்சர்களும் உடைகின்றனர். அதில் வனிதாவின் பெர்சனல் பொருட்களும் திருடர்களால் எடுக்கப்பட்டதாக தெரியவர, வனிதாவுக்கு பெரிய அளவுக்கு கோபம் வந்துவிட்டது. சும்மாவா வனிதா தனக்கு ஒரு அநீதி நடந்தால் பொறுக்காமல் பொங்கிவிடுவார்.
ஆக்ரோசமான வனிதா
இந்த முறை போலீஸ் கெட்டப்பில் வேறு இருக்கிறார் அல்லவா? ரவுண்டி கட்டி திருடர்களை துரத்திய வனிதா, தன் பொருட்களை எடுக்கிறாகள், வீட்டு பொருட்களை உடைக்கிறார்கள் என்றதும் வேற மாதிரி கோபத்துக்கு ஆளாகி, அதற்கு காரணமானவர்களிடம் கடுகடுக்கத் தொடங்கிவிட்டார். குறிப்பாக திருடனான பாலாஜி முருகதாஸை ஓடிச்சென்று துரத்தி பிடித்த வனிதா, பாலாஜி ஏதோ ஒரு பொருளை உடைத்துவிட, அதை கேமரா முன்பு காட்டி, என்ன இது பிக்பாஸ்? பொருள் எல்லாம் உடைக்குறாங்க.? இதையெல்லாம் ஏற்க முடியாது என கோபமாக கேட்டார்.
ஒடைச்சிருவேன் வீட்டையே
தொடர்ந்து யுனிஃபார்மை கழட்டுவதற்காக தன் ரூமுக்கு சென்று தன்னுடைய உடைகளை மாற்றுடைக்காக எடுத்துக்கொண்டு அங்கிருந்து டிரெஸ்ஸிங் ரூமுக்கு செல்லத் தொடங்கிவிட்டார். அப்போது, பெர்சனல் பொருளை எடுத்தால் ஒடைச்சிருவேன் வீட்டையே.. என்று ஆக்ரோஷமாக பேசிக்கொண்டு சென்றார்.
24 மணி நேரமும்..
முன்னதாக, “இந்த நிகழ்ச்சி இப்போது 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிறது என்பதால் தான் நான் வந்தேன். இல்லையென்றால், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்க மாட்டேன். அதாவது முந்தைய சீசன்களை போல 1 மணி நேரம் நடப்பது மட்டுமே மக்களுக்கு காட்டப்படும் என்றிருந்திருந்தால் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு 2வது முறை வந்திருக்கவே மாட்டேன்!” என வனிதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.