VIDEO: 'அவங்க' போய் அரை மணி நேரம் ஆச்சு... அனிதாவுக்கு 'மீம்' போட்ட ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இயந்திர மனிதா டாஸ்க் இன்னும் தொடர்கிறது. இதில் தற்போது அர்ச்சனா அணியினர் மனிதர்களாக மாற, பாலாஜி அணியினர் ரோபோக்களாக மாறி தங்களது ஹார்ட்டுகளை எளிதில் இழந்து வருகின்றனர். மூன்றுக்கும் மேற்பட்ட ரோபோக்களை அர்ச்சனா அணி செயலிழக்க வைத்து விட்டால் அவர்கள் வெற்றி பெற்று விடுவர்.

இந்த நிலையில் டாஸ்க் இடைவேளையின் போது அனிதா தன்னுடைய சாப்பாடு தட்டை கழுவ வந்தார். அப்போது அர்ச்சனாவும் அங்கு வர, ஏன் Bossy ரோபோன்னு சொன்னா கோபப்படுறீங்க? சோம்லாம் கோபமே படல என அர்ச்சனாவிடம் அனிதா கேட்டார். இதற்கு பதில் சொல்லிக்கொண்டே அர்ச்சனா சென்றுவிட அது தெரியாமல் அனிதா பேசிக்கொண்டே இருந்தார்.

அப்போது அங்கு வந்த பாலாஜி யார்கிட்ட தனியா பேசிட்டு இருக்க. அவங்க போய் அரைமணி நேரம் ஆச்சு என அனிதாவிடம் சொன்னார். பதிலுக்கு அனிதா அவங்க எங்க இருந்தாலும் காது கேட்கும் என பாலாஜியிடம் சொல்ல, சரியாக அந்த நேரத்தில் அர்ச்சனா என்ன ஸ்ட்ராட்டஜி என இருவரிடமும் கேட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் மீம் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Why you Talking alone ? Balaji asked to Anitha Sampath

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.