பிக்பாஸ் வீட்டின் புத்திசாலி என புகழப்பட்ட ரம்யாவை ரசிகர்கள் தற்போது கேள்வி கேட்க ஆரம்பித்து இருக்கின்றனர். கோர்ட் டாஸ்க் முடிந்து வெளியே வந்தபோது ஆரி குறித்து வளர்ப்பு சரியில்லை என கமெண்ட் செய்த சம்யுக்தா அவரை ஒருமையிலும் திட்டினார். ரம்யாவுக்கு இதுகுறித்து எல்லாமே தெரியும். ஏனெனில் ரம்யாவிடம் தான் சம்யுக்தா அப்படி சொன்னார். ஆனால் இதுவரை அவர் அதுகுறித்து வாய் திறக்கவில்லை.

எனினும் சமீபகாலமாக ஆரிக்கு எதிராக அவர் சண்டை போடுவது புதிய சந்தேகங்களுக்கு வழிவகுத்து இருக்கிறது. நேற்று முன்தினம் பாலாஜி முருகதாஸ்- ஆரி சண்டையின்போது ரம்யா பாயிண்ட், பாயிண்டாக பேசி ஆரியை தடுமாற வைத்தார். அதேபோல நேற்று நடைபெற்ற ஆரி-சம்யுக்தா சண்டையிலும் கூட அவர் ஆரியைத் தான் கேள்வி கேட்டார். சம்யுக்தா, பாலாஜியிடம் எதுவும் கேட்கவில்லை.
அதே நேரம் கேப்ரியலா-பாலாஜி இருவரும் சண்டை போட்டபோது அவர் எதுவும் சொல்லவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இதைப்பார்த்த ரசிகர்கள் எப்பவுமே ஆரிக்கு எதிராகவே ஏன் பேசுறீங்க? பாலாஜி, சம்யுக்தாவுக்கு சப்போர்ட் பண்ற நீங்க மத்தவங்க யார் சண்டை போட்டாலும் பெருசா கண்டுக்க மாட்றீங்க? ஆனா ஆரியை தொடர்ந்து கார்னர் பண்ணிட்டு இருக்கீங்க என குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
எந்த கேங்கிலும் இல்லை என சொல்லப்பட்டாலும் பல இடங்களில் அவர் சம்யுக்தா, பாலாஜிக்கு வெளிப்படையாகவே சப்போர்ட் செய்து இருக்கிறார். அதே நேரம் ஆரியை தொடர்ந்து ரம்யா குறிவைக்க, அவர் வலிமையான போட்டியாளர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.