பிக்பாஸ் வீட்டில், கோரியோகிராஃபர் அமீர் மற்றும் நடிகர் சஞ்சீவ் உள்ளிட்டோர் புதிதாக இணைந்துள்ளனர். இதனை அடுத்து அனைவரும் ட்ரூத் ஆர் டேர் விளையாடினர்.
எப்போதும் ராஜூ பேசுவதை அனைவருமே விரும்புவார்கள். அதற்கு காரணம் ராஜூ எதைச் சொன்னாலும் சர்ச்சைக்குள்ளாகாமல், அவற்றை நகைச்சுவையாக சொல்வதுதான்.
ஆனாலும் ராஜூ கோவப்படாமல் இருப்பதால், அபினய் ராஜூவுக்கு டம்மி பீஸ் என்கிற விருதை பிக்பாஸ் விருது வழங்கும் டாஸ்கில் கொடுத்தார். இதேபோல், பாவனிக்கும் தாமரைக்கும் இடையில் ஏற்பட்ட உரசல்களின் போது, ராஜூ தாமரைக்கு சப்போர்ட் செய்து பேசியுள்ளார்.
இப்படி இருக்க, இந்த ட்ரூத் ஆர் டேர் சேலஞ்சில் ராஜூ, அபினயிடம், “பாவனியை லவ் பண்றியா?” என கேட்டார். அதற்கு அனைவரும் அதிர்ந்தனர். அபினயையும் “என்னடா கேக்குற?” என கூறிவிட்டார். அதன் பின் ஐக்கி, இமான் என அனைவரும் ராஜூவிடம், “ஏன் இப்படி கேட்ட?” என்றதும், “அதுதான் டேர் அவர் இல்லை என்றால் இல்லை என சொல்லலாம். அதானே கேம்?” என பதில் கூறினார்.
இதன் பிறகு பிரியங்கா, அபிஷேக், நிரூப் உள்ளிட்டோர் முன்னிலையில், பாவனி - அபினய் தொடர்பாக தான் கேள்வி கேட்ட அந்த செயல் சரியா என ராஜூ கருத்து கேட்டார். அப்போது அபிஷேக், “அதை அவர்கள் தான் பேச வேண்டும். இது முடிந்துவிட்டது. விட்டுவிடுங்கள்” என்று கூற, பிரியங்காவோ, ராஜூவை பார்த்து “நீ செஞ்சது கேவளமான செயல்தான். கல்யாணம் ஆன அபினயை பார்த்து அப்படி கேட்பது தவறு, அது அவரை எவ்விதத்தில் பாதிக்கும் என்று கல்யாணம் உனக்கு தெரியாதா” என கேட்டார்.
பின்னர் நிரூப்பிடம் அபினய் இதே விவகாரம் குறித்து பேசும்போது, “ராஜூ நகைச்சுவையை பாவனிக்கு எதிரான ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறான். மிரர் டாஸ்க்கில் இருந்தே பாவனியை கஷ்படுத்தும் வேலையை ராஜூ செய்து வருகிறான்” என்று கூறினார்.
ஆனால் நிரூப்போ, “ராஜூ அப்படி கேக்கணும்னு டக்குனு யோசிக்காம கேட்டுட்டான். அது தப்புதான். ஆனா அவன் அதை உள்நோக்கத்துடன் செய்யவில்லை” என்று கூறினார்.
இந்நிலையில் இதுகுறித்து அபினயிடம் பேசிய பாவனி, “நான் முன்பே உங்களிடம் அப்படியான ஃபீலிங் இருக்கிறதா? என கேட்டுவிட்டேன். அதற்கு நீங்களே பதில் சொல்லிவிட்டீர்கள். அதற்கு பிறகு இவருக்கு என்ன?” என சொல்லிக் கொண்டிருந்தார்.
இதற்கு பாவனியிடம் பதிலுக்கு பேசிக்கொண்டிருந்த அபினய், “அப்படியே உனக்கும் எனக்கும் ஒரு விஷயம் நடக்குதுனா, அது அவனை(ராஜூவை) எந்த விதத்தில் பாதிக்கின்றது?” என்று கூறினார்.